• May 19 2024

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரி மனித சங்கிலி போராட்டம்! கர்தினால் அழைப்பு samugammedia

Chithra / Apr 17th 2023, 11:56 am
image

Advertisement

உயிர்த்த ஞாயிறுதாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான கிறிஸ்தவ திருச்சபையின் முயற்சிகளிற்கு அனைத்து இலங்கையர்களும் தங்கள் பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'நீதி நிலைநாட்டப்படும் வரை நாங்கள் உங்களை அவதானித்துக்கொண்டிருப்போம்' என்ற தொனிப்பொருளில் 21ம் திகதி பரப்புரை இயக்கமொன்று ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


மனித சங்கிலி போராட்டத்தை ஆரம்பித்துள்ள கிறிஸ்தவ திருச்சபை  வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 8.45 வரை மனிதசங்கிலி போராட்டத்தை முன்னெடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நீங்கள் நீர்கொழும்பு, கொழும்பு பிரதான வீதிக்கோ அல்லது  தெகிவளை முதல் மொராட்டுவை வரையிலோ அல்லது களுத்துறை முதல் பேருவளை வரையிலோ மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் அமைதியாக கோசங்கள் எவற்றையும் எழுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்களை தொந்தரவு செய்யும் விதத்தில் செயற்படக்கூடாது காலைநேர போக்குவரத்திற்கு குழப்பம் விளைவிக்ககூடாது நாங்கள் அமைதியான விதத்தில் மௌனப் போராட்டத்திலேயே ஈடுபடுகின்றோம் எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரி மனித சங்கிலி போராட்டம் கர்தினால் அழைப்பு samugammedia உயிர்த்த ஞாயிறுதாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான கிறிஸ்தவ திருச்சபையின் முயற்சிகளிற்கு அனைத்து இலங்கையர்களும் தங்கள் பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.'நீதி நிலைநாட்டப்படும் வரை நாங்கள் உங்களை அவதானித்துக்கொண்டிருப்போம்' என்ற தொனிப்பொருளில் 21ம் திகதி பரப்புரை இயக்கமொன்று ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.மனித சங்கிலி போராட்டத்தை ஆரம்பித்துள்ள கிறிஸ்தவ திருச்சபை  வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 8.45 வரை மனிதசங்கிலி போராட்டத்தை முன்னெடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.நீங்கள் நீர்கொழும்பு, கொழும்பு பிரதான வீதிக்கோ அல்லது  தெகிவளை முதல் மொராட்டுவை வரையிலோ அல்லது களுத்துறை முதல் பேருவளை வரையிலோ மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் அமைதியாக கோசங்கள் எவற்றையும் எழுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.மக்களை தொந்தரவு செய்யும் விதத்தில் செயற்படக்கூடாது காலைநேர போக்குவரத்திற்கு குழப்பம் விளைவிக்ககூடாது நாங்கள் அமைதியான விதத்தில் மௌனப் போராட்டத்திலேயே ஈடுபடுகின்றோம் எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement