• May 04 2024

சுகாதார அமைச்சகத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நோட்டீஸ்! SamugamMedia

Tamil nila / Feb 24th 2023, 10:03 am
image

Advertisement

நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு மக்களின் மனித உரிமை மீறல் என சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


இது தொடர்பான பதிப்புகளுக்கு சுகாதார அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.



மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.


குறித்த மனுவில் பிரதிவாதிகளாக சுகாதார செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபை ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


இதேவேளை, நாட்டின் பொது சுகாதார சேவையும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


சுகாதார அமைச்சகத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நோட்டீஸ் SamugamMedia நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு மக்களின் மனித உரிமை மீறல் என சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இது தொடர்பான பதிப்புகளுக்கு சுகாதார அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.குறித்த மனுவில் பிரதிவாதிகளாக சுகாதார செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபை ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.இதேவேளை, நாட்டின் பொது சுகாதார சேவையும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement