• Nov 28 2024

'நான் அநுரவின் ஆள்' - வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு மர்ம நபர் அச்சுறுத்தல்..!

Sharmi / Oct 1st 2024, 11:57 am
image

வவுனியாவில் இன்றையதினம்(01) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த நபரால் குழப்ப நிலை ஏற்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு, வவுனியாவில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று(01)காலை இடம்பெற்றது.

இதன்போது, திடீரென வந்த மர்ம நபர் ஒருவர், தன்னை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் அச்சுறுத்தலும் விட்டிருந்தார்.

இதனால் அப்பகுதியில் குழப்பநிலை உருவானது. 

குறித்த மர்ம நபர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கலைந்து செல்லுமாறும், பணத்திற்காக வேடம் போடும் கூட்டம் நீங்கள் என்றும் கூறியதுடன் இன புதிய அரசாங்கம் அநுரவின் அரசாங்கம் இனிமேல் இப்படியெல்லாம் செய்ய முடியாது என்றும் உடனடியாக இவ்விடத்தை விட்டு செல்லுமாறும் தவறின் அடிவிழும் என்றும் எச்சரிக்கை விடுத்து ஒருமையிலும் தகாத வார்த்தைகளாலும் பேசியிருந்தார். 

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், குறித்த நபருடன் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்ததுடன் குறித்த நபர் அப்பகுதியில் இருந்து விலகி சென்றிருந்தார்.

மேலும் குறித்த பகுதியில் மிகுந்த சனநெரிசலாக காணப்பட்ட போதிலும் யாரும் முன்வந்து குறித்த நபரை தடுக்கவோ கேள்வி கேட்கவோ முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 



'நான் அநுரவின் ஆள்' - வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு மர்ம நபர் அச்சுறுத்தல். வவுனியாவில் இன்றையதினம்(01) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த நபரால் குழப்ப நிலை ஏற்பட்டது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு, வவுனியாவில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று(01)காலை இடம்பெற்றது.இதன்போது, திடீரென வந்த மர்ம நபர் ஒருவர், தன்னை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் அச்சுறுத்தலும் விட்டிருந்தார்.இதனால் அப்பகுதியில் குழப்பநிலை உருவானது. குறித்த மர்ம நபர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கலைந்து செல்லுமாறும், பணத்திற்காக வேடம் போடும் கூட்டம் நீங்கள் என்றும் கூறியதுடன் இன புதிய அரசாங்கம் அநுரவின் அரசாங்கம் இனிமேல் இப்படியெல்லாம் செய்ய முடியாது என்றும் உடனடியாக இவ்விடத்தை விட்டு செல்லுமாறும் தவறின் அடிவிழும் என்றும் எச்சரிக்கை விடுத்து ஒருமையிலும் தகாத வார்த்தைகளாலும் பேசியிருந்தார். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், குறித்த நபருடன் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்ததுடன் குறித்த நபர் அப்பகுதியில் இருந்து விலகி சென்றிருந்தார்.மேலும் குறித்த பகுதியில் மிகுந்த சனநெரிசலாக காணப்பட்ட போதிலும் யாரும் முன்வந்து குறித்த நபரை தடுக்கவோ கேள்வி கேட்கவோ முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement