• May 01 2024

பிள்ளையார் சுழி போட்டது நான்...!அதையே ரணில் இன்று தொடர்கின்றார்-அலி சப்ரி!samugammedia

Sharmi / Apr 19th 2023, 12:17 pm
image

Advertisement

வடக்கு மாகாணத்தை சேர்ந்த 12 ஆயிரம் இளைஞர்களிற்கு அரசாங்கம் மறுவாழ்வளித்தது, அவர்களை பராமரித்து, அவர்களிற்கு நிதிஉதவியை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக சர்வதேச நாணயநிதியத்துடனான அணுகுமறைகள் வெற்றி கரமாக அமைந்துள்ளன.நாடு மிகமோசமான நெருக்கடியை எதிர்கொண்டகாலத்தில் நான் நிதியமைச்சராக பணியாற்றினேன்.

நானே சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தேன். ஜனாதிபதி இன்று அதனை தொடர்ந்து முன்னெடுக்கின்றார்.சர்வதேச நாணயநிதியத்துடனான எங்களின் ஈடுபாடு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

மிகநீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட வடக்குகிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிற்கு சர்வதேச உதவிகள் தேவை. நாங்கள் இந்தியாவுடன் மேலும் ஒன்றிணைவை  ஏற்படுத்தமுயற்சிக்கின்றோம். இதனடிப்படையில் நாங்கள் இந்தியாவுடனான விமானசேவைகளை அதிகரிக்க முயல்கின்றோம். நாங்கள் விரைவில் இந்தியா இலங்கை படகுச்சேவையை ஆரம்பிப்போம்.

இலங்கை தனியொரு பிராந்திய கூட்டமைப்புடன் மாத்திரம் இணைந்து செயற்படவிரும்பவில்லை.

நாங்கள் சீனாவுடன் மேற்குலக மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடவிரும்புகின்றோம் என தெரிவித்தார்.

பிள்ளையார் சுழி போட்டது நான்.அதையே ரணில் இன்று தொடர்கின்றார்-அலி சப்ரிsamugammedia வடக்கு மாகாணத்தை சேர்ந்த 12 ஆயிரம் இளைஞர்களிற்கு அரசாங்கம் மறுவாழ்வளித்தது, அவர்களை பராமரித்து, அவர்களிற்கு நிதிஉதவியை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக சர்வதேச நாணயநிதியத்துடனான அணுகுமறைகள் வெற்றி கரமாக அமைந்துள்ளன.நாடு மிகமோசமான நெருக்கடியை எதிர்கொண்டகாலத்தில் நான் நிதியமைச்சராக பணியாற்றினேன்.நானே சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தேன். ஜனாதிபதி இன்று அதனை தொடர்ந்து முன்னெடுக்கின்றார்.சர்வதேச நாணயநிதியத்துடனான எங்களின் ஈடுபாடு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.மிகநீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட வடக்குகிழக்கை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிற்கு சர்வதேச உதவிகள் தேவை. நாங்கள் இந்தியாவுடன் மேலும் ஒன்றிணைவை  ஏற்படுத்தமுயற்சிக்கின்றோம். இதனடிப்படையில் நாங்கள் இந்தியாவுடனான விமானசேவைகளை அதிகரிக்க முயல்கின்றோம். நாங்கள் விரைவில் இந்தியா இலங்கை படகுச்சேவையை ஆரம்பிப்போம்.இலங்கை தனியொரு பிராந்திய கூட்டமைப்புடன் மாத்திரம் இணைந்து செயற்படவிரும்பவில்லை.நாங்கள் சீனாவுடன் மேற்குலக மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடவிரும்புகின்றோம் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement