பௌத்த மதகுருமார்களும் உலக தமிழர் பேரவை குழுவினரும் இணைந்து ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்த இமாலய பிரகடனம் குறித்து தங்களிற்கு எதுவும் தெரியாது என பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்தவாரம் பன்முகதன்மையை முன்னிலைப்படுத்தும் இமாலய பிரகடனத்தை உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் பௌத்தமதகுருமாரும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தனர்.
இந்நிலையில் இந்த பிரகடனத்தில் கைச்சாத்திட்ட தரப்பினருடன் தங்களிற்கு எந்த தொடர்பும் இல்லை என பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரட்ண விதான பத்திரன தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பிரகடனம் குறித்த முழுமையான விபரங்கள் அமைச்சிற்கு இன்னமும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்த பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரகடனத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னரே அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எமக்கு எதுவும் தெரியாது. உலக தமிழர் பேரவைக்கு முற்றுப்புள்ளி வைத்த புத்தசாசன அமைச்சு. பௌத்த மதகுருமார்களும் உலக தமிழர் பேரவை குழுவினரும் இணைந்து ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்த இமாலய பிரகடனம் குறித்து தங்களிற்கு எதுவும் தெரியாது என பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்தவாரம் பன்முகதன்மையை முன்னிலைப்படுத்தும் இமாலய பிரகடனத்தை உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் பௌத்தமதகுருமாரும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தனர்.இந்நிலையில் இந்த பிரகடனத்தில் கைச்சாத்திட்ட தரப்பினருடன் தங்களிற்கு எந்த தொடர்பும் இல்லை என பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரட்ண விதான பத்திரன தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட பிரகடனம் குறித்த முழுமையான விபரங்கள் அமைச்சிற்கு இன்னமும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக இந்த பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பிரகடனத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னரே அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.