• Jan 31 2025

அரசியலில் அதிக காலம் நீடிக்க விருப்பமில்லை – அர்ச்சுனா எம்.பி. அதிரடி அறிவிப்பு

Chithra / Jan 30th 2025, 1:14 pm
image

 

அரசியலில் அதிக காலம் நீடிக்க எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நேற்று (29) அனுராதபுரத்தில்  வைத்து சிங்கள ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்த அரசியல் கலாசாரத்தின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. நான் இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை.

தற்போது மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளேன். நீண்ட காலம் அரசியலில் நீடிக்கப்போவதில்லை. இருக்கும் வரை நேர்மையாக செயற்படவுள்ளேன், அரசியல் என்பது எனக்குப் பிடிக்காத ஒரு துறை   என தெரிவித்தார்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு அனுராதபுரத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் (29) யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் வைத்து அனுராதபுரம் காவல்துறையினரால் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.

பின்னர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அரசியலில் அதிக காலம் நீடிக்க விருப்பமில்லை – அர்ச்சுனா எம்.பி. அதிரடி அறிவிப்பு  அரசியலில் அதிக காலம் நீடிக்க எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.நேற்று (29) அனுராதபுரத்தில்  வைத்து சிங்கள ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசியல் கலாசாரத்தின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. நான் இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை.தற்போது மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளேன். நீண்ட காலம் அரசியலில் நீடிக்கப்போவதில்லை. இருக்கும் வரை நேர்மையாக செயற்படவுள்ளேன், அரசியல் என்பது எனக்குப் பிடிக்காத ஒரு துறை   என தெரிவித்தார்.இதேவேளை கடந்த சில தினங்களுக்கு அனுராதபுரத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் (29) யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் வைத்து அனுராதபுரம் காவல்துறையினரால் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.பின்னர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement