• Apr 19 2026

திருமலையில் விசேட தேவையுடையோருக்கான விளையாட்டு நிகழ்வு..!

Ziya / Jan 30th 2025, 1:07 pm
image

திருகோணமலை மாவட்ட விசேட தேவையுடையோருக்கான வருடாந்த விளையாட்டு விழா இன்றையதினம்(30) திருகோணமலை இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட சமூக சேவை திணைக்களம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 

இதன்போது 64 விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்ததுடன் இதில் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் தேசிய மட்ட விளையாட்டு விழாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன் தெரிவித்தார்.

இந்நிகழ்வை திருகோணமலை மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.சுதாகரன் அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.





திருமலையில் விசேட தேவையுடையோருக்கான விளையாட்டு நிகழ்வு. திருகோணமலை மாவட்ட விசேட தேவையுடையோருக்கான வருடாந்த விளையாட்டு விழா இன்றையதினம்(30) திருகோணமலை இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.திருகோணமலை மாவட்ட சமூக சேவை திணைக்களம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது 64 விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்ததுடன் இதில் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் தேசிய மட்ட விளையாட்டு விழாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன் தெரிவித்தார்.இந்நிகழ்வை திருகோணமலை மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.சுதாகரன் அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement