• Jan 16 2025

ரணிலுடன் இணையும் திட்டம் எனக்கு இல்லை;ஹிருணிக்கா பிரேமசந்திர உறுதி..!

Sharmi / Jan 16th 2025, 9:57 am
image

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் திட்டம் எனக்கு  இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்பட வேண்டும். அதேவேளை கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது குறைப்பாடுகளை இனங்கண்டு அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். 

அவ்வாறு இல்லாவிட்டால் எமது பக்கம் இருப்பவர்கள் சஜித்தை கைவிட்டு ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையக்கூடும்.

எனக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் திட்டம் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே பயணிக்க எதிர்பார்க்கின்றேன். சஜித் தன்னை பலப்படுத்திக்கொண்டால் பிறரின் உதவிகள் தேவைப்படாது  எனவும் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.





ரணிலுடன் இணையும் திட்டம் எனக்கு இல்லை;ஹிருணிக்கா பிரேமசந்திர உறுதி. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் திட்டம் எனக்கு  இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்பட வேண்டும். அதேவேளை கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது குறைப்பாடுகளை இனங்கண்டு அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எமது பக்கம் இருப்பவர்கள் சஜித்தை கைவிட்டு ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையக்கூடும்.எனக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் திட்டம் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே பயணிக்க எதிர்பார்க்கின்றேன். சஜித் தன்னை பலப்படுத்திக்கொண்டால் பிறரின் உதவிகள் தேவைப்படாது  எனவும் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement