• Nov 24 2024

சும்மா இருக்கும் போட்டி – பரிசு வழங்கும் தென்கொரிய அரசு

Tharun / May 18th 2024, 6:29 pm
image

சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். இங்கு ஒரு நாட்டில் சும்மா இருப்பதற்கு   போட்டி வைத்து பரிசும் கொடுத்திருக்கிறார்கள். அது எங்கு தெரியுமா? 

தென் கொரியாவில் தான் இந்த போட்டி நடந்திருக்கிறது. 

தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது.

இந்த போட்டியில் அந்த நாட்டின் ஒலிம்பிக் வீரர், பிரபல யூ டியூபர் உள்பட 117 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். சரியாக 1½ மணிநேரம் (90 நிமிடங்கள்) செல்போன் பார்க்காமலும், யாரிடமும் பேசாமலும் கண்களை விழித்தவாறு சும்மாவே உட்கார வேண்டும். அவர்களின் இதய துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

பின்னர் போட்டியாளர்களில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் நிலையான இதயத்துடிப்புடன் உள்ளவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பரிசு கொடுக்கப்பட்டது.

சும்மா இருக்கும் போட்டி – பரிசு வழங்கும் தென்கொரிய அரசு சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். இங்கு ஒரு நாட்டில் சும்மா இருப்பதற்கு   போட்டி வைத்து பரிசும் கொடுத்திருக்கிறார்கள். அது எங்கு தெரியுமா தென் கொரியாவில் தான் இந்த போட்டி நடந்திருக்கிறது. தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது.இந்த போட்டியில் அந்த நாட்டின் ஒலிம்பிக் வீரர், பிரபல யூ டியூபர் உள்பட 117 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். சரியாக 1½ மணிநேரம் (90 நிமிடங்கள்) செல்போன் பார்க்காமலும், யாரிடமும் பேசாமலும் கண்களை விழித்தவாறு சும்மாவே உட்கார வேண்டும். அவர்களின் இதய துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.பின்னர் போட்டியாளர்களில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் நிலையான இதயத்துடிப்புடன் உள்ளவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பரிசு கொடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement