• Apr 29 2025

வெண்கரம் அமைப்பின் பல சமூக நலத்திட்டங்கள்

Chithra / Apr 29th 2025, 3:48 pm
image


அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சுகுணராணி சண்முகேந்திரனை கௌரவிக்கும் முகமாக வெண்கரம் அமைப்பினால் பல சமூக நலத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அந்தவகையில் மாணவர்களின் எதிர்கால இலக்கு தொடர்பாக மிக சிறந்த அனுபவங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கணினி பயிற்சிநெறி மாணவர்களுக்காக நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தையும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள SOS தொழிற்பயிற்சி நிலையத்தையும் தரிசிக்கும் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது பேராசிரியர் சி.ரகுராம்  பீடாதிபதி கலைப்பீடம், பேராசிரியர் கே.ரீ கணேசலிங்கம் அரசறிவியல்துறை இருவரையும் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு மாணவர்களுக்கு  கிடைத்தது.

மாணவர்கள் தமது எதிர்கால இலக்கை நோக்கி நகர்த்துவதற்கான வழிகாட்டலாக, பல்கலைக்கழக வளங்களை மாணவர்கள் பெற்று பயனடைவது தொடர்பாக கலந்துரையாடல்கள் அமைந்திருந்தன. தொடர்ந்து கணினி ஆய்வு கூட செயற்பாடுகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள SOS தொழிற்பயிற்சி நிலையத்தை மாணவர்கள் பார்வையிட்டு 

அங்கு பயனுள்ள நிழல் தரும் மரக்கன்றுகளை நாட்டும் செயற்றிட்டம்  அமைப்பின் இயக்குனர் திருமதி ச.சுகுணராணியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

SOS தொழிற் பயிற்சி நிலைய இயக்குநர்  ம. நந்தகுமார் வெண்கரம் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர்   மு.கோமகன் ஆகியோருடன் மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர்.


வெண்கரம் அமைப்பின் பல சமூக நலத்திட்டங்கள் அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சுகுணராணி சண்முகேந்திரனை கௌரவிக்கும் முகமாக வெண்கரம் அமைப்பினால் பல சமூக நலத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.அந்தவகையில் மாணவர்களின் எதிர்கால இலக்கு தொடர்பாக மிக சிறந்த அனுபவங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் கணினி பயிற்சிநெறி மாணவர்களுக்காக நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தையும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள SOS தொழிற்பயிற்சி நிலையத்தையும் தரிசிக்கும் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.இதன்போது பேராசிரியர் சி.ரகுராம்  பீடாதிபதி கலைப்பீடம், பேராசிரியர் கே.ரீ கணேசலிங்கம் அரசறிவியல்துறை இருவரையும் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு மாணவர்களுக்கு  கிடைத்தது.மாணவர்கள் தமது எதிர்கால இலக்கை நோக்கி நகர்த்துவதற்கான வழிகாட்டலாக, பல்கலைக்கழக வளங்களை மாணவர்கள் பெற்று பயனடைவது தொடர்பாக கலந்துரையாடல்கள் அமைந்திருந்தன. தொடர்ந்து கணினி ஆய்வு கூட செயற்பாடுகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள SOS தொழிற்பயிற்சி நிலையத்தை மாணவர்கள் பார்வையிட்டு அங்கு பயனுள்ள நிழல் தரும் மரக்கன்றுகளை நாட்டும் செயற்றிட்டம்  அமைப்பின் இயக்குனர் திருமதி ச.சுகுணராணியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.SOS தொழிற் பயிற்சி நிலைய இயக்குநர்  ம. நந்தகுமார் வெண்கரம் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர்   மு.கோமகன் ஆகியோருடன் மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement