• May 19 2024

225 எம்.பிக்களும் இணைந்தால் இலங்கையை போதையில்லா நாடாக மாற்றமுடியும்...! சஜித் அட்வைஸ்...!samugammedia

Sharmi / Sep 27th 2023, 4:11 pm
image

Advertisement

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இலங்கையை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றமுடியும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை பெறுவதற்கான விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விசேட வரப்பிரசாதங்களைப்(VIP) பயன்படுத்தி விமான நிலையத்தில் இருந்து தங்கம் கொண்டு வந்த எம்பிக்கு எதிராக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானம் கொண்டு வந்ததைப் போல மது, புகையிலை, சிகரெட் மற்றும் போதைப்பொருள் பாவனையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதித்தால், நாடு என்ற வகையில் முன்ணுதாரனமாக செயற்பட முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புகையிலை, சிகரெட், மதுபானம் தொடர்பான வரி வருமானம் நாட்டுக்கு சரியாக கிடைக்காமல் போவது சில அரச அதிகாரிகள் நிறுவனங்களின் கைப்பாவையாக மாறியுள்ள பின்னணியில் என்றும்,  225 பேரும் இணைந்து சட்டங்களை இயற்றினால் இதனையும் இல்லாதொழிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்த போதும் கடத்தல்களை மேற்கொள்வதால் இவர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் உள்ளதைப் போன்று கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதன் மூலம் தற்போதைய பாடசாலை கட்டமைப்பை ஆட்கொண்டுள்ள போதைப்பொருள் கடத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்

225 எம்.பிக்களும் இணைந்தால் இலங்கையை போதையில்லா நாடாக மாற்றமுடியும். சஜித் அட்வைஸ்.samugammedia பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் இலங்கையை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றமுடியும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை பெறுவதற்கான விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,விசேட வரப்பிரசாதங்களைப்(VIP) பயன்படுத்தி விமான நிலையத்தில் இருந்து தங்கம் கொண்டு வந்த எம்பிக்கு எதிராக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானம் கொண்டு வந்ததைப் போல மது, புகையிலை, சிகரெட் மற்றும் போதைப்பொருள் பாவனையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதித்தால், நாடு என்ற வகையில் முன்ணுதாரனமாக செயற்பட முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.புகையிலை, சிகரெட், மதுபானம் தொடர்பான வரி வருமானம் நாட்டுக்கு சரியாக கிடைக்காமல் போவது சில அரச அதிகாரிகள் நிறுவனங்களின் கைப்பாவையாக மாறியுள்ள பின்னணியில் என்றும்,  225 பேரும் இணைந்து சட்டங்களை இயற்றினால் இதனையும் இல்லாதொழிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்த போதும் கடத்தல்களை மேற்கொள்வதால் இவர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் உள்ளதைப் போன்று கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.இதன் மூலம் தற்போதைய பாடசாலை கட்டமைப்பை ஆட்கொண்டுள்ள போதைப்பொருள் கடத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement