• Sep 21 2024

சமுதாய நலன் கருதி மேற்கொள்ளப்படும் செயற்பாட்டில் நான் தோற்றுப்போனால் சமுதாயம் தோற்றுப்போவதாக அர்த்தம்- யாழ் மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் ! samugammedia

Tamil nila / Aug 11th 2023, 8:46 pm
image

Advertisement

சமுதாய நலன் கருதி மேற்கொள்ளப்படும் செயற்பாட்டில் நான் தோற்றுப்போனால் சமுதாயம் தோற்றுப்போவதாக அர்த்தம்- யாழ் மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  கருத்து தெரிவிக்கும் போது  இதனை தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெள்ளி மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டமையானது ஆன்மீகத்திற்காகவே நிறுத்தப்பட்டது என கூறுவதானது முற்றிலும் தவறான விடயம். இந்துக்களை அதிகமாகக் கொண்ட மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையை விடுமுறையாக அமுல்படுத்துவதானது சிறிய விடயமே.

இந் நடவடிக்கையானது ஞாயிற்றுக்கிழமைகளில் தரம் 9 வரையான சிறுவர்கள் சுதந்திரமாக இருப்பதற்கான செயற்பாடாகும்.  குறித்த நடவடிக்கையின் பின்னர் வட்சப் செயலியில் குழு ஒன்று உருவாக்கப்பட்டு இந் நடமுறைகளை மீறுவோர்கள் தொடர்பான தரவுகள் இற்றைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. 

இம் மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான கல்வி நிலையங்களினதும் பௌதீக வளங்கள் , ஆசிரிய வளங்கள் , மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களுக்கான நேரசூசி போன்ற விடயங்கள் முதற்கட்டமாக பெறப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இது தனிபட்டவர்களின் வருமானம் ,  மாணவர்களின் கல்விக்கு எதிரான நடவடிக்கையல்ல மாறாக சமூதாய நலன் கருதி மேற்கொள்ளப்படும் விடயம்.

இதற்கு பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினரும  பூரண ஆதரவளிக்கின்றனர்.  சமுதாய நலன் கருதி மேற்கொள்ளப்படும் இச் செயற்பாட்டில் நான் தோற்றுப்போனால் சமுதாயம் தோற்றுப்போவதாக அர்த்தம். எனத் தெரிவித்தார்.

சமுதாய நலன் கருதி மேற்கொள்ளப்படும் செயற்பாட்டில் நான் தோற்றுப்போனால் சமுதாயம் தோற்றுப்போவதாக அர்த்தம்- யாழ் மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் samugammedia சமுதாய நலன் கருதி மேற்கொள்ளப்படும் செயற்பாட்டில் நான் தோற்றுப்போனால் சமுதாயம் தோற்றுப்போவதாக அர்த்தம்- யாழ் மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  கருத்து தெரிவிக்கும் போது  இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,வெள்ளி மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டமையானது ஆன்மீகத்திற்காகவே நிறுத்தப்பட்டது என கூறுவதானது முற்றிலும் தவறான விடயம். இந்துக்களை அதிகமாகக் கொண்ட மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையை விடுமுறையாக அமுல்படுத்துவதானது சிறிய விடயமே.இந் நடவடிக்கையானது ஞாயிற்றுக்கிழமைகளில் தரம் 9 வரையான சிறுவர்கள் சுதந்திரமாக இருப்பதற்கான செயற்பாடாகும்.  குறித்த நடவடிக்கையின் பின்னர் வட்சப் செயலியில் குழு ஒன்று உருவாக்கப்பட்டு இந் நடமுறைகளை மீறுவோர்கள் தொடர்பான தரவுகள் இற்றைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இம் மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான கல்வி நிலையங்களினதும் பௌதீக வளங்கள் , ஆசிரிய வளங்கள் , மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களுக்கான நேரசூசி போன்ற விடயங்கள் முதற்கட்டமாக பெறப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இது தனிபட்டவர்களின் வருமானம் ,  மாணவர்களின் கல்விக்கு எதிரான நடவடிக்கையல்ல மாறாக சமூதாய நலன் கருதி மேற்கொள்ளப்படும் விடயம்.இதற்கு பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினரும  பூரண ஆதரவளிக்கின்றனர்.  சமுதாய நலன் கருதி மேற்கொள்ளப்படும் இச் செயற்பாட்டில் நான் தோற்றுப்போனால் சமுதாயம் தோற்றுப்போவதாக அர்த்தம். எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement