• Sep 21 2024

இந்தியா தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுத்தர ஆதரவளித்தால், இந்திய நலனுக்காக நாம் பாடுபடுவோம்- கஜேந்திரன் எம் பி! samugammedia

Tamil nila / Jul 9th 2023, 10:51 pm
image

Advertisement

13 ஆவது திருத்தச்சட்டம் தமிழருக்குத் தீர்வல்ல, ஒற்றையாட்சியைத் தாண்டி தமிழ் தேசம், இறமை, சுயநிர்ணய அடிப்படையில் இந்தியா தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுத் தர ஆதரவளித்தால், இந்திய நலனுக்காக நாம் பாடுபடுவோம். என இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஊடாக அனுப்பவுள்ள கடித்த்தில் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன்  தெரிவித்தார்.

கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை ( இன்று 09) நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். அதனை ஒட்டி தமிழ் மக்களுடைய 75 ஆண்டுகால இனப் பிரச்சினைக்கு தீர்வு விடயத்திலே இந்தியா ஒரு காத்திரமான நிலைப்பாட்டை எடுத்து இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்ற அடிப்படையிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கடிதம் ஒன்று நாளை (இன்று திங்கள்கிழமை) யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் பொறுப்பதிகாரிடம் கையளிக்கப்பட்டவுள்ளது. அதனுடைய பிரதி மின்னஞ்சல் ஊடாக யாழில் உள்ள துணை தூதுவருக்கு அனுப்பப்பட்டு அதனை இந்திய பிரதமருக்கு அனுப்புமாறு கேட்டு இருக்கின்ற மின்னஞ்சல் கடந்த வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அனுப்பப்படவுள்ள மூலப்பிரதியில் உள்ள சாராம்சங்கள் 75 வருட ஆண்டு காலம் புரையோடிப் போய் உள்ள இனப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு தீர்வும் பொருத்தப்பாடு உடையது அல்ல. குறிப்பாக 13ஆம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. 

என்பதனை சுட்டிக்காட்டி ஒற்றை ஆட்சியைக் கடந்து தமிழ் தேசம், இறமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டதான ஒரு தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தியதாக கடிதம் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறான ஒரு சுயாட்சி எட்டப்படுகின்ற பொழுது இந்த நாடு ஒரு புதிய சமஸ்டியை கொண்டு உருவாக்கக்கூடிய நாடு இந்தியாவில் நலன்களுக்கு மாற போகாமல் இந்தியாவின் நலன்களை பேணுவதற்கு ஒத்துழைக்கும். குறிப்பாக தமிழ் தேசம் இந்தியாவின் நலன்களிலே அக்கறையோடு செயல்படும் என்கின்ற விடயமும் இதில் உள்ளடக்கி இருப்பதாக பா.உ செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

இந்தியா தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுத்தர ஆதரவளித்தால், இந்திய நலனுக்காக நாம் பாடுபடுவோம்- கஜேந்திரன் எம் பி samugammedia 13 ஆவது திருத்தச்சட்டம் தமிழருக்குத் தீர்வல்ல, ஒற்றையாட்சியைத் தாண்டி தமிழ் தேசம், இறமை, சுயநிர்ணய அடிப்படையில் இந்தியா தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுத் தர ஆதரவளித்தால், இந்திய நலனுக்காக நாம் பாடுபடுவோம். என இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஊடாக அனுப்பவுள்ள கடித்த்தில் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன்  தெரிவித்தார்.கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில்  ஞாயிற்றுக்கிழமை ( இன்று 09) நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். அதனை ஒட்டி தமிழ் மக்களுடைய 75 ஆண்டுகால இனப் பிரச்சினைக்கு தீர்வு விடயத்திலே இந்தியா ஒரு காத்திரமான நிலைப்பாட்டை எடுத்து இலங்கை அரசு மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்ற அடிப்படையிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கடிதம் ஒன்று நாளை (இன்று திங்கள்கிழமை) யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் பொறுப்பதிகாரிடம் கையளிக்கப்பட்டவுள்ளது. அதனுடைய பிரதி மின்னஞ்சல் ஊடாக யாழில் உள்ள துணை தூதுவருக்கு அனுப்பப்பட்டு அதனை இந்திய பிரதமருக்கு அனுப்புமாறு கேட்டு இருக்கின்ற மின்னஞ்சல் கடந்த வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுப்பப்படவுள்ள மூலப்பிரதியில் உள்ள சாராம்சங்கள் 75 வருட ஆண்டு காலம் புரையோடிப் போய் உள்ள இனப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு தீர்வும் பொருத்தப்பாடு உடையது அல்ல. குறிப்பாக 13ஆம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. என்பதனை சுட்டிக்காட்டி ஒற்றை ஆட்சியைக் கடந்து தமிழ் தேசம், இறமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டதான ஒரு தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தியதாக கடிதம் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறான ஒரு சுயாட்சி எட்டப்படுகின்ற பொழுது இந்த நாடு ஒரு புதிய சமஸ்டியை கொண்டு உருவாக்கக்கூடிய நாடு இந்தியாவில் நலன்களுக்கு மாற போகாமல் இந்தியாவின் நலன்களை பேணுவதற்கு ஒத்துழைக்கும். குறிப்பாக தமிழ் தேசம் இந்தியாவின் நலன்களிலே அக்கறையோடு செயல்படும் என்கின்ற விடயமும் இதில் உள்ளடக்கி இருப்பதாக பா.உ செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement