• Apr 23 2025

தகவல் வழங்கினால் பல இலட்சங்களை பெறலாம்! இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Chithra / Mar 8th 2025, 8:10 am
image

 

சட்டவிரோத செயல்கள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கான வெகுமதிகள் அதிகரிப்பு குறித்து பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ரீ – 56 ரக துப்பாக்கியை தம்வசம் வைத்திருக்கும் சந்தேகநபரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 10 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குபவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், பிஸ்டோல் ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டால் பொலிஸாருக்கு 4 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குனருக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

சந்தேகநபரின்றி துப்பாக்கி மாத்திரம் மீட்கப்பட்டால் பொலிஸாருக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்கும் நபருக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைதானால் பொலிஸாருக்கு 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்குனருக்கு 30 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

தகவல் வழங்கினால் பல இலட்சங்களை பெறலாம் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு  சட்டவிரோத செயல்கள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கான வெகுமதிகள் அதிகரிப்பு குறித்து பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இதன்படி, ரீ – 56 ரக துப்பாக்கியை தம்வசம் வைத்திருக்கும் சந்தேகநபரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 10 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குபவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.அத்துடன், பிஸ்டோல் ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டால் பொலிஸாருக்கு 4 இலட்சம் ரூபாவும், தகவல் வழங்குனருக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.சந்தேகநபரின்றி துப்பாக்கி மாத்திரம் மீட்கப்பட்டால் பொலிஸாருக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்கும் நபருக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைதானால் பொலிஸாருக்கு 50 ஆயிரம் ரூபாவும், தகவல் வழங்குனருக்கு 30 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement