• May 19 2024

மின்கட்டணத்தை அதிகரித்தால் ஒட்டுமொத்த தொழிற்றுறையும் வீழ்ச்சியடையும்..! இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை! samugammedia

Chithra / Oct 26th 2023, 9:14 am
image

Advertisement

 

மின்சார சபையின் நிதி நிலைமை குறித்து மாத்திரம் கவனம் செலுத்தினால் நாட்டில் மின்சார சபை மாத்திரமே மிகுதியாக இருக்கும் என முதலீட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம்(25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மின்கட்டண அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. மின்கட்டண அதிகரிப்புக்கு மின்சாரத்துறை அமைச்சரவை விமர்சிப்பது பயனற்றது, ஏனெனில் அமைச்சரின் தனி விருப்பத்துக்கு அமைய மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

தற்போதைய மின்கட்டண அதிகரிப்பால் புதிய முதலீட்டாளர்களை நாட்டுக்கு கொண்டு வருவது கடினமாக உள்ள நிலையில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரித்தால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை முழுமையாக வீழ்ச்சியடையும்.

மின்சார சபையின் நிதி நிலைமையை முகாமைத்துவம் செய்ய மின்கட்டணத்தை அதிகரித்தால் ஒட்டுமொத்த தொழிற்றுறையும் முழுமையாக வீழ்ச்சியடையும்.

இது எதிர்மறையான தாக்களை ஏற்படுத்தும். இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்ட மின்கட்டண அதிகரிப்பால் பெரும்பாலான ஆடைத்தொழிற்சாலைகள் இரவு நேரங்களில் இயங்குகின்றன.

தற்போதைய 18 சதவீத மின்கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்தினால் பெரும்பாலான ஆடைத்தொழிற்சாலைகளை முழுமையாக மூடி வேண்டிய நிலை ஏற்படும்.என்றார். 

மின்கட்டணத்தை அதிகரித்தால் ஒட்டுமொத்த தொழிற்றுறையும் வீழ்ச்சியடையும். இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை samugammedia  மின்சார சபையின் நிதி நிலைமை குறித்து மாத்திரம் கவனம் செலுத்தினால் நாட்டில் மின்சார சபை மாத்திரமே மிகுதியாக இருக்கும் என முதலீட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம்(25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.மின்கட்டண அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. மின்கட்டண அதிகரிப்புக்கு மின்சாரத்துறை அமைச்சரவை விமர்சிப்பது பயனற்றது, ஏனெனில் அமைச்சரின் தனி விருப்பத்துக்கு அமைய மின்கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.தற்போதைய மின்கட்டண அதிகரிப்பால் புதிய முதலீட்டாளர்களை நாட்டுக்கு கொண்டு வருவது கடினமாக உள்ள நிலையில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரித்தால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்றுறை முழுமையாக வீழ்ச்சியடையும்.மின்சார சபையின் நிதி நிலைமையை முகாமைத்துவம் செய்ய மின்கட்டணத்தை அதிகரித்தால் ஒட்டுமொத்த தொழிற்றுறையும் முழுமையாக வீழ்ச்சியடையும்.இது எதிர்மறையான தாக்களை ஏற்படுத்தும். இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்ட மின்கட்டண அதிகரிப்பால் பெரும்பாலான ஆடைத்தொழிற்சாலைகள் இரவு நேரங்களில் இயங்குகின்றன.தற்போதைய 18 சதவீத மின்கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்தினால் பெரும்பாலான ஆடைத்தொழிற்சாலைகளை முழுமையாக மூடி வேண்டிய நிலை ஏற்படும்.என்றார். 

Advertisement

Advertisement

Advertisement