• Nov 24 2024

மொட்டுக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றினால் உறவினர்களுக்கே பதவிகள்! - அநுர பகிரங்கம்

Chithra / Aug 29th 2024, 8:16 am
image


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியைக் கைப்பற்றினால் உறவினர்களுக்கே பதவிகள் பகிரப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை ஸ்தாபித்தால், தம்பியை ஜனாதிபதியாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறார்.

அடுத்த தம்பி பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சுப் பதவியை வழங்குகிறார்.  அண்ணனை அமைச்சராக்குகிறார். சமல் ராஜபக்ஷவின் புதல்வருக்கு அமைச்சுப் பதவியை வழங்குகிறார். 

ரணில் விக்ரமசிங்கவிற்கு அவ்வாறு உறவினர்கள் இல்லை.  அதன் காரணமாக அவர், கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஆலோசகர் பதவிகளை வழங்கியுள்ளார். 

சாகல ரத்னாயக்க, அகில விராஜ் காரியவசம், ஆஷூ மாரசிங்க, ருவன் விஜேவர்த்தன, ஹரீன் பெர்னாண்டோ, மனுச நாணயக்கார ஆகியோருக்கு இந்த ஆலோசகர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் தங்களது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே இந்த நியமனங்கள் வழங்கப்படுவதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மொட்டுக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றினால் உறவினர்களுக்கே பதவிகள் - அநுர பகிரங்கம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியைக் கைப்பற்றினால் உறவினர்களுக்கே பதவிகள் பகிரப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை ஸ்தாபித்தால், தம்பியை ஜனாதிபதியாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறார்.அடுத்த தம்பி பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சுப் பதவியை வழங்குகிறார்.  அண்ணனை அமைச்சராக்குகிறார். சமல் ராஜபக்ஷவின் புதல்வருக்கு அமைச்சுப் பதவியை வழங்குகிறார். ரணில் விக்ரமசிங்கவிற்கு அவ்வாறு உறவினர்கள் இல்லை.  அதன் காரணமாக அவர், கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஆலோசகர் பதவிகளை வழங்கியுள்ளார். சாகல ரத்னாயக்க, அகில விராஜ் காரியவசம், ஆஷூ மாரசிங்க, ருவன் விஜேவர்த்தன, ஹரீன் பெர்னாண்டோ, மனுச நாணயக்கார ஆகியோருக்கு இந்த ஆலோசகர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காமல் தங்களது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே இந்த நியமனங்கள் வழங்கப்படுவதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement