• Apr 27 2024

பணம் கிடைக்காவிட்டால்... அஞ்சல் மூல வாக்குகளுக்கு புதிய திகதி! வெளியான அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 12th 2023, 12:30 pm
image

Advertisement

எதிர்வரும் புதன்கிழமைக்குள் திறைசேரி 500 மில்லியன் ரூபாவை வழங்காவிட்டால் அஞ்சல் மூல வாக்குகளுக்கான புதிய திகதியை அறிவிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தலுக்கான திகதியாக ஏப்ரல் 25ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அஞ்சல் மூல வாக்களிப்புக்களுக்கு எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை காலம் குறிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அஞ்சல் வாக்குகளை அச்சிடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என அரசாங்க அச்சகப் பணியாளர் கங்கானி லியனகேயும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், எதிர்வரும் புதன்கிழமைக்குள் தமது ஆணைக்குழு 500 மில்லியன் ரூபாவை முன்பணமாகப் பெற்றுக் கொள்ளாவிட்டால் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான புதிய திகதி அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த மாத இறுதிக் காலப்பகுதிவரை திறைசேரியிலிருந்து மொத்தம் 1,100 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.


இதேவேளை மார்ச் 20 திங்கட்கிழமைக்குள் பணம் கிடைக்காவிட்டால், தாம் நீதிமன்றங்களுக்குச் சென்று தமக்கான நிதியை திறைசேரி ஒதுக்கீடு செய்யாதது குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இது குறித்து திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அச்சிடும் பணிக்காக 533 மில்லியன் ரூபா கோரப்பட்ட போதிலும், 339 மில்லியன் ரூபா இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், அதனால் அச்சடிக்கும் பணியை முன்னெடுக்க முடியவில்லை என்று அரச அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான 2,500 அச்சுப் பணிகள் முடிக்கப்பட உள்ளன, ஆனால் இதுவரை 54 மட்டுமே செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

பணம் கிடைக்காவிட்டால். அஞ்சல் மூல வாக்குகளுக்கு புதிய திகதி வெளியான அறிவிப்பு SamugamMedia எதிர்வரும் புதன்கிழமைக்குள் திறைசேரி 500 மில்லியன் ரூபாவை வழங்காவிட்டால் அஞ்சல் மூல வாக்குகளுக்கான புதிய திகதியை அறிவிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தலுக்கான திகதியாக ஏப்ரல் 25ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அஞ்சல் மூல வாக்களிப்புக்களுக்கு எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை காலம் குறிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், அஞ்சல் வாக்குகளை அச்சிடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என அரசாங்க அச்சகப் பணியாளர் கங்கானி லியனகேயும் தெரிவித்துள்ளார்.இந்த சூழ்நிலையில், எதிர்வரும் புதன்கிழமைக்குள் தமது ஆணைக்குழு 500 மில்லியன் ரூபாவை முன்பணமாகப் பெற்றுக் கொள்ளாவிட்டால் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான புதிய திகதி அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த மாத இறுதிக் காலப்பகுதிவரை திறைசேரியிலிருந்து மொத்தம் 1,100 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.இதேவேளை மார்ச் 20 திங்கட்கிழமைக்குள் பணம் கிடைக்காவிட்டால், தாம் நீதிமன்றங்களுக்குச் சென்று தமக்கான நிதியை திறைசேரி ஒதுக்கீடு செய்யாதது குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இது குறித்து திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் அச்சிடும் பணிக்காக 533 மில்லியன் ரூபா கோரப்பட்ட போதிலும், 339 மில்லியன் ரூபா இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், அதனால் அச்சடிக்கும் பணியை முன்னெடுக்க முடியவில்லை என்று அரச அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.தேர்தல் தொடர்பான 2,500 அச்சுப் பணிகள் முடிக்கப்பட உள்ளன, ஆனால் இதுவரை 54 மட்டுமே செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement