• Nov 08 2024

அரச நிதியை கையாள்வது எப்படி என தெரியாவிட்டால் பாட்டனாரிடம் கேளுங்கள் - அரசுக்கு ரணில் அறிவுரை

Chithra / Nov 8th 2024, 11:19 am
image

 

கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை புதிய அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

தெல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான உதய சேனவிரத்ன அறிக்கையை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரச நிதியை கையாள்வது எப்படி என தெரியாவிட்டால் அரசாங்கம் 'பாட்டனாரிடம் " ஆலோசனை பெறவேண்டும் எனவும்  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு நிதியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனுபவமுள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.


அரச நிதியை கையாள்வது எப்படி என தெரியாவிட்டால் பாட்டனாரிடம் கேளுங்கள் - அரசுக்கு ரணில் அறிவுரை  கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை புதிய அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.தெல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான உதய சேனவிரத்ன அறிக்கையை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.அரச நிதியை கையாள்வது எப்படி என தெரியாவிட்டால் அரசாங்கம் 'பாட்டனாரிடம் " ஆலோசனை பெறவேண்டும் எனவும்  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு நிதியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அத்துடன், அனுபவமுள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement