உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் என பெப்ரல் அமைப்பு எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிமன்றத்தில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டாலன்றி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை.
எனவே புதிய வேட்புமனுவைக் கோருவதற்கு 23ஆம் திகதி வரை நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்படாவிட்டால் சட்டத்தை நிறைவேற்றி ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும்.
அவ்வாறில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டியேற்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
பெப்ரல் அமைப்பு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தை நாடி தீர்ப்பையும் பெற்றுக் கொண்டுள்ளது. எவ்வாறிருப்பினும் பழைய வேட்புமனுக்கமைய தேர்தல் நடத்தப்பட்டால் அதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர்.
அதற்கமைய பழைய வேட்புமனுவை இரத்து செய்து, புதிய வேட்புமனுவைக் கோரி அதற்கமைய தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் புதிதாக சுமார் நான்கரை இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு தமது வாக்குகளைப் பயன்படுத்த முடியும்.
அதேபோன்று உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுகுறித்த சட்ட மூலம் கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
23ஆம் திகதி வரை இதற்கான ஆட்சேபனைக் காலமும் காணப்படுகிறது.
எனவே ஏப்ரல் முதல் வாரத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் என்று நம்புகின்றோம் என்றார்.
உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் - எச்சரிக்கும் பெப்ரல் அமைப்பு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் என பெப்ரல் அமைப்பு எச்சரித்துள்ளது.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நீதிமன்றத்தில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டாலன்றி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை.எனவே புதிய வேட்புமனுவைக் கோருவதற்கு 23ஆம் திகதி வரை நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்படாவிட்டால் சட்டத்தை நிறைவேற்றி ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டியேற்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.பெப்ரல் அமைப்பு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தை நாடி தீர்ப்பையும் பெற்றுக் கொண்டுள்ளது. எவ்வாறிருப்பினும் பழைய வேட்புமனுக்கமைய தேர்தல் நடத்தப்பட்டால் அதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். அதற்கமைய பழைய வேட்புமனுவை இரத்து செய்து, புதிய வேட்புமனுவைக் கோரி அதற்கமைய தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிதாக சுமார் நான்கரை இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு தமது வாக்குகளைப் பயன்படுத்த முடியும். அதேபோன்று உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். இதுகுறித்த சட்ட மூலம் கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.23ஆம் திகதி வரை இதற்கான ஆட்சேபனைக் காலமும் காணப்படுகிறது.எனவே ஏப்ரல் முதல் வாரத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் என்று நம்புகின்றோம் என்றார்.