• Oct 05 2024

நோயை குணப்படுத்த வேண்டுமெனில் கசப்பான மருந்தை குடித்தே ஆகவேண்டும் - அமைச்சர் அறிவுரை!

Tamil nila / Feb 10th 2023, 6:24 pm
image

Advertisement

13ஆம் திருத்தத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தங்களின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.


9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


எமது நோயை குணப்படுத்திக்கொள்ள வேண்டுமெனில் மிகவும் கசப்பான மருந்தை குடித்தே ஆக வேண்டும் என்றால் அதனை நாங்கள் குடிக்கத்தான் வேண்டும்.


அதனை நிராகரித்தால் நோயை குணப்படுத்த முடியாமல் போகும். அந்த நிலையே தற்போது எமது நாட்டு எதிர்கொண்டுள்ளது.


யார் ஆட்சிக்குவந்தாலும் சர்வதேச நாணய நிதியம் தனது கொள்கையை மாற்றிக்கொள்ளப்போவதில்லை. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கையை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர், சர்வதேச நாணய நிதித்துக்கு செல்லாமல் பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு தீர்வுகாண்பது என்பதை தெரிவிக்கவேண்டும்.


அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ளும் வகையில் எமது பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டி இருக்கிறது. 


அதனால்தான் சில பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்க வேண்டி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


பொருளாதார மறுசீரமைப்பை விரைவாக மேற்கொள்ளாமல் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. மேலும் காணிப்பிரச்சினை வடக்கில் மாத்திரம் அல்ல. அனைத்து பிரதேசங்களிலும் காணப்படுகிறது. 


அதனால் காணிப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஆணைக்குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.


எனவே நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியை நாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். 


அரசியல் பேதங்களை மறந்து நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் நிமல் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

நோயை குணப்படுத்த வேண்டுமெனில் கசப்பான மருந்தை குடித்தே ஆகவேண்டும் - அமைச்சர் அறிவுரை 13ஆம் திருத்தத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தங்களின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.எமது நோயை குணப்படுத்திக்கொள்ள வேண்டுமெனில் மிகவும் கசப்பான மருந்தை குடித்தே ஆக வேண்டும் என்றால் அதனை நாங்கள் குடிக்கத்தான் வேண்டும்.அதனை நிராகரித்தால் நோயை குணப்படுத்த முடியாமல் போகும். அந்த நிலையே தற்போது எமது நாட்டு எதிர்கொண்டுள்ளது.யார் ஆட்சிக்குவந்தாலும் சர்வதேச நாணய நிதியம் தனது கொள்கையை மாற்றிக்கொள்ளப்போவதில்லை. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கையை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினர், சர்வதேச நாணய நிதித்துக்கு செல்லாமல் பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு தீர்வுகாண்பது என்பதை தெரிவிக்கவேண்டும்.அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ளும் வகையில் எமது பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டி இருக்கிறது. அதனால்தான் சில பிரபல்லியமற்ற தீர்மானங்களை எடுக்க வேண்டி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.பொருளாதார மறுசீரமைப்பை விரைவாக மேற்கொள்ளாமல் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. மேலும் காணிப்பிரச்சினை வடக்கில் மாத்திரம் அல்ல. அனைத்து பிரதேசங்களிலும் காணப்படுகிறது. அதனால் காணிப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஆணைக்குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.எனவே நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியை நாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அரசியல் பேதங்களை மறந்து நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் நிமல் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement