• Oct 05 2024

இனவாத அரசியலை தூண்டுவதற்கே ரணில் 13 ஆவது திருத்தத்தை களத்தில் இறக்கியுள்ளார் - ஜேவிபி குற்றச்சாட்டு!

Tamil nila / Feb 10th 2023, 6:39 pm
image

Advertisement

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.


9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.


பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பொது இணக்கப்பாட்டுக்கு வருதல் அவசியமாகும். 

அதிகார பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. 


சர்வக்கட்சி கூட்டத்தில் 13 ஆவது திருத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த ஆளும் தரப்பினர் மக்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்து இனவாதத்தை தூண்டி விடுகிறார்கள்.


இனவாதத்தை முன்னிலைப்படுத்தியே ராஜபக்சர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். 


இனவாதம் இவர்களின் பிரதான அரசியல் பிரசாரமாகும். நாட்டில் பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் ஏதாவதொரு வழியில் பிரச்சினைகளை தோற்றுவித்து ஆட்சியை கைப்பற்றிக் கொள்வார்கள்.


புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் அரசிலமைப்பு சபை உருவாக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 


82 கூட்டங்கள் நடத்தப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர், முஸ்லிம் அரசியல் கட்சிகள், பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தமது நிலைப்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார்கள்.


புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்போது அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. 


மக்கள் வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அவசியம் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பலமுறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்த நிலையில்,

தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றாக வாழ்ந்தால் அது இனவாத அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர் தற்போது 13 ஆவது திருத்தத்தை களத்தில் விட்டுள்ளார்.

இனவாத அரசியலை தூண்டுவதற்கே ரணில் 13 ஆவது திருத்தத்தை களத்தில் இறக்கியுள்ளார் - ஜேவிபி குற்றச்சாட்டு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பொது இணக்கப்பாட்டுக்கு வருதல் அவசியமாகும். அதிகார பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. சர்வக்கட்சி கூட்டத்தில் 13 ஆவது திருத்தத்திற்கு இணக்கம் தெரிவித்த ஆளும் தரப்பினர் மக்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவித்து இனவாதத்தை தூண்டி விடுகிறார்கள்.இனவாதத்தை முன்னிலைப்படுத்தியே ராஜபக்சர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். இனவாதம் இவர்களின் பிரதான அரசியல் பிரசாரமாகும். நாட்டில் பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் ஏதாவதொரு வழியில் பிரச்சினைகளை தோற்றுவித்து ஆட்சியை கைப்பற்றிக் கொள்வார்கள்.புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் அரசிலமைப்பு சபை உருவாக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 82 கூட்டங்கள் நடத்தப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர், முஸ்லிம் அரசியல் கட்சிகள், பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தமது நிலைப்பாடுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார்கள்.புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்போது அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. மக்கள் வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அவசியம் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பலமுறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்த நிலையில்,தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றாக வாழ்ந்தால் அது இனவாத அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர் தற்போது 13 ஆவது திருத்தத்தை களத்தில் விட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement