• Oct 05 2024

இந்தியாவை குற்றம் சுமத்துவதன் உள்நோக்கம் என்ன.?? - ரவூப் ஹக்கீம் கேள்வி!

Tamil nila / Feb 10th 2023, 6:17 pm
image

Advertisement

உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்திய பின்னர், அதனை கைவிட்டு நாடாளுமன்றத்துக்கு வந்துள்ள தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று நாடாளுமன்றில் தமிழில் உரையாற்றியபோது, அவருடைய உணர்வுகளை நாடாளுமன்றில் உள்ள எத்தனை பேர் புரிந்துக்கொண்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.


9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிரிக்கப்படாத நாட்டில் அதிகாரப்பரவாலக்கத்தை கோருகிறது.

எனினும், தொடர்ந்தும் பழைய வரலாற்றையே கூறிக்கொண்டிருப்பதாக ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் இந்தியா, இலங்கைக்கு 4 பில்லியன் டொலர்கள் என்ற பாரிய உதவியை அளித்துள்ளது.


அத்துடன் 1987 ஆண்டில் இலங்கையின் இறைமைக்காக இந்திய அமைதிப்படையினர் தமது உயிர்களை அர்ப்பணம் செய்தனர்.


எனினும் பலர் இன்று இந்தியாவை குற்றம் சுமத்திக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தேசியவாதமே குற்றவாளிகளின் இறுதி இடமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை குற்றம் சுமத்துவதன் உள்நோக்கம் என்ன. - ரவூப் ஹக்கீம் கேள்வி உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்திய பின்னர், அதனை கைவிட்டு நாடாளுமன்றத்துக்கு வந்துள்ள தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று நாடாளுமன்றில் தமிழில் உரையாற்றியபோது, அவருடைய உணர்வுகளை நாடாளுமன்றில் உள்ள எத்தனை பேர் புரிந்துக்கொண்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிரிக்கப்படாத நாட்டில் அதிகாரப்பரவாலக்கத்தை கோருகிறது.எனினும், தொடர்ந்தும் பழைய வரலாற்றையே கூறிக்கொண்டிருப்பதாக ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை தற்போதைய சூழ்நிலையில் இந்தியா, இலங்கைக்கு 4 பில்லியன் டொலர்கள் என்ற பாரிய உதவியை அளித்துள்ளது.அத்துடன் 1987 ஆண்டில் இலங்கையின் இறைமைக்காக இந்திய அமைதிப்படையினர் தமது உயிர்களை அர்ப்பணம் செய்தனர்.எனினும் பலர் இன்று இந்தியாவை குற்றம் சுமத்திக்கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் தேசியவாதமே குற்றவாளிகளின் இறுதி இடமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement