இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளை ஒன்றுகூடலானது எதிர்வரும் 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை, நோர்த்கோல்ற் கொமினிட்டி சென்டர், மனோர் கவுஸ், ஈலிங் றோட், நோர்த்கோல்ற்
மிடில்செக் UB5 6AD என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது. என அக் கிளையின் பிரதான ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சொக்கநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலண்டனில் அண்ணளவாக நான்கு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியினை வலுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வை இங்கே உள்ள தமிழர்களிடத்தே ஏற்படுத்துவதுடன், அவர்கள் கட்சியின் செயற்பாடுகளிலும் பங்கெடுக்க வழிசமைக்க வேண்டும்.
நாங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையினை இங்கே பதிவு செய்துள்ளோம். இதில் 50ற்கு மேற்பட்ட நிர்வாக செயற்பாட்டாளர்களும் நூற்றி நாற்பதுக்கும் மேற்பட்ட அங்கத்தவர்களும் காணப்படுகின்றனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.குலநாயகம் அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற விண்ணப்ப படிவங்கள் மூலமே உத்தியோகபூர்வமாக இந்த கிளையை பதிவு செய்துள்ளோம்.
மேலும் இந்த கிளை சம்பந்தமானதும், இலங்கை தமிழரசுக் கட்சி சம்பந்தமானதுமான தெளிவூட்டல் மற்றும் கலந்துரையாடலுக்காகவே நாங்கள் இந்த ஒன்றுகூடலை ஏற்படுத்தியுள்ளோம் - என்றார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளை ஒன்றுகூடல். இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளை ஒன்றுகூடலானது எதிர்வரும் 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை, நோர்த்கோல்ற் கொமினிட்டி சென்டர், மனோர் கவுஸ், ஈலிங் றோட், நோர்த்கோல்ற்மிடில்செக் UB5 6AD என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் நடைபெறவுள்ளது. என அக் கிளையின் பிரதான ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சொக்கநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இலண்டனில் அண்ணளவாக நான்கு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர். இலங்கை தமிழரசுக் கட்சியினை வலுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வை இங்கே உள்ள தமிழர்களிடத்தே ஏற்படுத்துவதுடன், அவர்கள் கட்சியின் செயற்பாடுகளிலும் பங்கெடுக்க வழிசமைக்க வேண்டும்.நாங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் இலண்டன் கிளையினை இங்கே பதிவு செய்துள்ளோம். இதில் 50ற்கு மேற்பட்ட நிர்வாக செயற்பாட்டாளர்களும் நூற்றி நாற்பதுக்கும் மேற்பட்ட அங்கத்தவர்களும் காணப்படுகின்றனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.குலநாயகம் அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற விண்ணப்ப படிவங்கள் மூலமே உத்தியோகபூர்வமாக இந்த கிளையை பதிவு செய்துள்ளோம்.மேலும் இந்த கிளை சம்பந்தமானதும், இலங்கை தமிழரசுக் கட்சி சம்பந்தமானதுமான தெளிவூட்டல் மற்றும் கலந்துரையாடலுக்காகவே நாங்கள் இந்த ஒன்றுகூடலை ஏற்படுத்தியுள்ளோம் - என்றார்.