பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவரிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு பதுளை நகர் வரை வந்து சரிமாரியாக வாளால் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
பதுளை நகர மையத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் இன்றையதினம் மாலை, ஒரு சகோதரர் தனது தம்பியை சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் வாளால் வெட்டியுள்ளார்
குறித்த வாள் வெட்டு தாக்குதல்களுக்கு இலக்காகிய சகோதரர் உடம்பு முழுவதும் பல வெட்டு காயங்களுடன் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் காப்பாற்ற யாரும் அருகில் வந்தால், வெட்டுவேன்' என்று கூச்சலிட்டவாறு தாக்கியதால் குறித்த சம்பவத்தில் காயமடைந்த வரை காப்பாற்ற அனைவரும் நெருங்க பயந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் பதுளை பொலிசாரின் ஓட்டுநர் மற்றும் சார்ஜென்ட் நிலந்த என்று கூறிக்கொண்ட ஒரு இளைஞன் அங்கு வந்து, சந்தேக நபரின் வார்த்தைகளுக்கு அஞ்சாமல், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்தனர்.
பல பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தில் பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் குறித்த சந்தேக நபரை கைது செய்ய முயற்சித்தமை பாராட்டத்தக்கது
குறித்த சம்பவம் தொடர்பாக, பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
“காப்பாற்ற வந்தால் வெட்டுவேன்” பொதுவெளியில் சகோதரனை தாறுமாறாக கொத்திய நபர் - பாய்ந்து பிடித்த பொலிஸ் பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவரிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு பதுளை நகர் வரை வந்து சரிமாரியாக வாளால் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளதுகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதுபதுளை நகர மையத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் இன்றையதினம் மாலை, ஒரு சகோதரர் தனது தம்பியை சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் வாளால் வெட்டியுள்ளார்குறித்த வாள் வெட்டு தாக்குதல்களுக்கு இலக்காகிய சகோதரர் உடம்பு முழுவதும் பல வெட்டு காயங்களுடன் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் காப்பாற்ற யாரும் அருகில் வந்தால், வெட்டுவேன்' என்று கூச்சலிட்டவாறு தாக்கியதால் குறித்த சம்பவத்தில் காயமடைந்த வரை காப்பாற்ற அனைவரும் நெருங்க பயந்தனர்.இச்சந்தர்ப்பத்தில் பதுளை பொலிசாரின் ஓட்டுநர் மற்றும் சார்ஜென்ட் நிலந்த என்று கூறிக்கொண்ட ஒரு இளைஞன் அங்கு வந்து, சந்தேக நபரின் வார்த்தைகளுக்கு அஞ்சாமல், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்தனர்.பல பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தில் பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் குறித்த சந்தேக நபரை கைது செய்ய முயற்சித்தமை பாராட்டத்தக்கதுகுறித்த சம்பவம் தொடர்பாக, பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.