• May 21 2025

7 மாதங்களில் 25 பேருடன் திருமணம் - 26வது திருமணத்திற்கு தயாரான நிலையில் பொறிவைத்துப் பிடித்த பொலிஸ்

Thansita / May 20th 2025, 9:29 pm
image

திருமணம் என்ற பெயரில் ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்ற 23 வயதான  இளம்பெண், கடந்த 7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ள சம்பவம்  ஒன்று நடைபெற்றுள்ளது .

இந்த சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,

 அனுராதா என்னும் பெயருடைய பெண் சமூக வலைதளங்கள் மற்றும் திருமணத்  தரகர்கள் வழியாக தனது வலையை விரித்துள்ளார்.

திருமணத்திற்காக விருப்பமுடன் பெண்களை தேடும் ஆண்களை குறிவைத்து, அவர்களுடன் சட்டப்படி பதிவு திருமணம் செய்து, சில நாட்களில் நகை, பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு  அனுராதா தொடர்ந்து  மாயமாகி வந்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சவாய் மாதோப்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சர்மா என்ற நபர் புகார் அளித்ததை தொடர்ந்து, அனுராதாவின் ஏமாற்று வேலைகள்  வெளிச்சத்திற்கு வந்த அதே நேரம்  விசாரணைகளும் ஆரம்பமாகின.   

அனுராதாவை சிக்க வைக்க பொலிஸ் எடுத்த நடவடிக்கையில்  ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளை வருங்கால மாப்பிள்ளையாக அறிமுகம் செய்து அவரை அனுராதா 26வது திருமணம் செய்ய முயன்றபோது  கைது செய்யப்பட்டார்.

கைதான பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அனுராதா பல மாநிலங்களில் மோசடி செய்துள்ளதாக தெரியவந்தது.மணமகளாக நடித்து, நம்பிக்கையுடன் வீட்டுக்குள் நுழைந்து, சில நாட்களில் கொள்ளை அடித்து ஓடுவதை அனுராதா வழக்கமாக்கி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

7 மாதங்களில் 25 பேருடன் திருமணம் - 26வது திருமணத்திற்கு தயாரான நிலையில் பொறிவைத்துப் பிடித்த பொலிஸ் திருமணம் என்ற பெயரில் ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்ற 23 வயதான  இளம்பெண், கடந்த 7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ள சம்பவம்  ஒன்று நடைபெற்றுள்ளது .இந்த சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, அனுராதா என்னும் பெயருடைய பெண் சமூக வலைதளங்கள் மற்றும் திருமணத்  தரகர்கள் வழியாக தனது வலையை விரித்துள்ளார்.திருமணத்திற்காக விருப்பமுடன் பெண்களை தேடும் ஆண்களை குறிவைத்து, அவர்களுடன் சட்டப்படி பதிவு திருமணம் செய்து, சில நாட்களில் நகை, பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு  அனுராதா தொடர்ந்து  மாயமாகி வந்துள்ளார்.இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சவாய் மாதோப்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சர்மா என்ற நபர் புகார் அளித்ததை தொடர்ந்து, அனுராதாவின் ஏமாற்று வேலைகள்  வெளிச்சத்திற்கு வந்த அதே நேரம்  விசாரணைகளும் ஆரம்பமாகின.   அனுராதாவை சிக்க வைக்க பொலிஸ் எடுத்த நடவடிக்கையில்  ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளை வருங்கால மாப்பிள்ளையாக அறிமுகம் செய்து அவரை அனுராதா 26வது திருமணம் செய்ய முயன்றபோது  கைது செய்யப்பட்டார்.கைதான பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அனுராதா பல மாநிலங்களில் மோசடி செய்துள்ளதாக தெரியவந்தது.மணமகளாக நடித்து, நம்பிக்கையுடன் வீட்டுக்குள் நுழைந்து, சில நாட்களில் கொள்ளை அடித்து ஓடுவதை அனுராதா வழக்கமாக்கி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement