முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள குளிர்பான நிலையத்திற்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால் 50,000 தண்டப்பணம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள குளிர்பான நிலையம் மீது கடந்த வாரம் திடீர் பரிசோதனை ஒன்று கிளிநொச்சி மாவட்ட சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது குளிர்பான நிலையம் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வருவது கண்டறியப்பட்டு குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குளிர்பான நிலையத்திற்கு எதிராக குளிர்பானம் தயாரிக்கும் பகுதி யன்னல், கதவு, இலையான், கொறியுயிர்கள், விலங்குகள் உட்செல்லக்கூடியவாறு திறந்த நிலையில் காணப்பட்டமை, குளிர்பானம் தயாரிக்கும் பகுதியில் சுவர், தரை அழுக்காக காணப்பட்டமை,
உணவு இலையானால் மாசடையும் வகையில் திறந்த நிலையில் விற்பனை செய்தமை, சுற்றுச்சூழலில் கழிவு நீர் தேங்கி இலையான் பெருகக்கூடியவாறு காணப்பட்டமை,
குப்பைத்தொட்டியானது மூடி இல்லாமல் காணப்பட்டமை,
உணவு கையாளும் நிலையத்தின் கழிவு நீரினை ஒழுங்குமுறையில் அகற்றாது உணவு மாசடையும் வகையில் திறந்த வெளியில் அகற்றியமை, உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவச்சான்றிதழ் இன்றி உணவை கையாண்டமை, உணவு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் ஏப்ரன் தொப்பி,கையுறை அணியாது உணவு தயாரிப்பில் ஈடுபட்டமை,
சுகாதாரமற்ற அழுக்கான றெஜிபோம் பெட்டிக்குள் உணவுப்பொருட்கள் களஞ்சிய படுத்தப்பட்டு காணப்பட்டமை, உணவு (சுட்டுதுண்டிடலும் விளம்பரப்டுத்தலும்) ஒழுங்குவிதிக்கு முரணான வகையில் சுட்டுத்துண்டிடாமல் உணவினை பொதி செய்தமை ஆகிய 10 குற்றச்சாட்டுகள் முன்வைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குளிர்பான நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது
இன்றையதினம் (20) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு குளிர்பான நிலைய உரிமையாளருக்கு
50,000 தண்டப் பணம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
குறித்த சோதனை நடவடிக்கையானது ,கிளிநொச்சி மாவட்ட மேற்பார்வைப் பொது சுகாதார பரிசோதகர் றெணால்ட் தலைமையில்
முழங்காவில் பொது சுகாதார பரிசோதகர் இ. தர்மிகன் இணைந்து குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தார்கள்.
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குளிர்பான நிலையம்- 50, 000 தண்டம் விதித்த கிளிநொச்சி நீதிமன்றம் முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள குளிர்பான நிலையத்திற்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால் 50,000 தண்டப்பணம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள குளிர்பான நிலையம் மீது கடந்த வாரம் திடீர் பரிசோதனை ஒன்று கிளிநொச்சி மாவட்ட சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த சோதனை நடவடிக்கையின் போது குளிர்பான நிலையம் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வருவது கண்டறியப்பட்டு குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.குளிர்பான நிலையத்திற்கு எதிராக குளிர்பானம் தயாரிக்கும் பகுதி யன்னல், கதவு, இலையான், கொறியுயிர்கள், விலங்குகள் உட்செல்லக்கூடியவாறு திறந்த நிலையில் காணப்பட்டமை, குளிர்பானம் தயாரிக்கும் பகுதியில் சுவர், தரை அழுக்காக காணப்பட்டமை,உணவு இலையானால் மாசடையும் வகையில் திறந்த நிலையில் விற்பனை செய்தமை, சுற்றுச்சூழலில் கழிவு நீர் தேங்கி இலையான் பெருகக்கூடியவாறு காணப்பட்டமை,குப்பைத்தொட்டியானது மூடி இல்லாமல் காணப்பட்டமை,உணவு கையாளும் நிலையத்தின் கழிவு நீரினை ஒழுங்குமுறையில் அகற்றாது உணவு மாசடையும் வகையில் திறந்த வெளியில் அகற்றியமை, உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவச்சான்றிதழ் இன்றி உணவை கையாண்டமை, உணவு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் ஏப்ரன் தொப்பி,கையுறை அணியாது உணவு தயாரிப்பில் ஈடுபட்டமை,சுகாதாரமற்ற அழுக்கான றெஜிபோம் பெட்டிக்குள் உணவுப்பொருட்கள் களஞ்சிய படுத்தப்பட்டு காணப்பட்டமை, உணவு (சுட்டுதுண்டிடலும் விளம்பரப்டுத்தலும்) ஒழுங்குவிதிக்கு முரணான வகையில் சுட்டுத்துண்டிடாமல் உணவினை பொதி செய்தமை ஆகிய 10 குற்றச்சாட்டுகள் முன்வைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.குளிர்பான நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றையதினம் (20) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு குளிர்பான நிலைய உரிமையாளருக்கு 50,000 தண்டப் பணம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.குறித்த சோதனை நடவடிக்கையானது ,கிளிநொச்சி மாவட்ட மேற்பார்வைப் பொது சுகாதார பரிசோதகர் றெணால்ட் தலைமையில் முழங்காவில் பொது சுகாதார பரிசோதகர் இ. தர்மிகன் இணைந்து குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தார்கள்.