• May 20 2024

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் சட்டவிரோத நடவடிக்கை – களமிறங்கும் கிழக்கு ஆளுநர்..! samugammedia

Chithra / Jun 18th 2023, 9:48 am
image

Advertisement

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகின்ற அதிகளவான வெளிநாட்டவர்கள், இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்குக் கரையோரங்களில், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் 

தாம் அவதானம் வெலுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வரி விதிப்பிற்கு அப்பால், சுதந்திரமாக தமது வணிக செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

வெளிநாட்டவர்களின் இந்த செயற்பாடானது, இலங்கைக்கு சுற்றுலா மூலம் அதிக வருவாய் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற போதும், மறுபுறத்தில் வரியினால் கிடைக்கும் நன்மைகளை இல்லாமல் செய்வதாக உள்ளுர் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் உள்ளூர்வாசிகளின் வணிகளுக்கு பாரிய நட்டங்களையும் ஏற்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் உணவகங்கள், விருந்தினர் விடுதிகள், யோகா முகாம்கள் போன்ற பல்வேறு வணிகங்களை நடத்தி வருகின்றனர்.

அறுகம்பே, அஹங்கம, உனவடுன, வெலிகம, மிரிஸ்ஸ போன்ற இடங்களில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தநிலையில் குறித்த பகுதிகளில் உரிமம் பெற்ற வணிகங்களை நடத்தும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள், சுற்றுலாப் பயணிகளின் இந்த செயற்பாடுகளை சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளனர்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் சட்டவிரோத நடவடிக்கை – களமிறங்கும் கிழக்கு ஆளுநர். samugammedia சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகின்ற அதிகளவான வெளிநாட்டவர்கள், இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்குக் கரையோரங்களில், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தாம் அவதானம் வெலுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.உள்நாட்டு வரி விதிப்பிற்கு அப்பால், சுதந்திரமாக தமது வணிக செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.வெளிநாட்டவர்களின் இந்த செயற்பாடானது, இலங்கைக்கு சுற்றுலா மூலம் அதிக வருவாய் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற போதும், மறுபுறத்தில் வரியினால் கிடைக்கும் நன்மைகளை இல்லாமல் செய்வதாக உள்ளுர் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.அத்துடன் உள்ளூர்வாசிகளின் வணிகளுக்கு பாரிய நட்டங்களையும் ஏற்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் உணவகங்கள், விருந்தினர் விடுதிகள், யோகா முகாம்கள் போன்ற பல்வேறு வணிகங்களை நடத்தி வருகின்றனர்.அறுகம்பே, அஹங்கம, உனவடுன, வெலிகம, மிரிஸ்ஸ போன்ற இடங்களில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.இந்தநிலையில் குறித்த பகுதிகளில் உரிமம் பெற்ற வணிகங்களை நடத்தும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள், சுற்றுலாப் பயணிகளின் இந்த செயற்பாடுகளை சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement