• Nov 28 2024

முல்லைத்தீவில் தீவிரமடையும் சட்டவிரோத மண் அகழ்வு...! கண்டுகொள்ளாத அதிகாரிகள்...! மக்கள் குற்றச்சாட்டு..!

Sharmi / Jun 15th 2024, 2:41 pm
image

முல்லைத்தீவு விஸ்வமடு நெத்திலி ஆறு பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் பல விவசாயிகளின் வயல் நிலங்களில் இரவு,பகலாக தொடர்ச்சியாக காணிமையாளரின் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரங்களின் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் கனியவளப் பிரிவினர் மற்றும் பொது அமைப்புகள் எவருமே இவ்விடயம் தொடர்பாக கண்டுகொள்வதில்லை எனவும் இதன் காரணமாக  அப்பாவி விவசாயிகள் பல வழிகளிலும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நெற்செய்கை மேற்கொள்ளும் பொழுது  காட்டு யானையின் தொல்லை ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவதாகவும், வயல் அறுவடை முடிந்ததும் மணல் கொள்ளை இடம்பெறுவதாகவும் இதனால், பாரிய அளவில் வயல் நிலங்கள் சீர் செய்வதற்கான பணச் செலவு ஏற்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக  பொலிஸ் நிலையங்களிலோ அல்லது வேறு எவரிடமும் முறைப்பாடு செய்ய முடியாத நிலையில் மணல் கொள்ளையர்களினால்  அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனிமையில் தமது வயல் பகுதிகளுக்கு பார்வையிடுவதற்கு செல்ல முடியாத அச்ச நிலை தோற்றியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய தீர்வுகளை பெற்று விவசாய நிலங்களில் மணல் அகழ்வை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்  எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


முல்லைத்தீவில் தீவிரமடையும் சட்டவிரோத மண் அகழ்வு. கண்டுகொள்ளாத அதிகாரிகள். மக்கள் குற்றச்சாட்டு. முல்லைத்தீவு விஸ்வமடு நெத்திலி ஆறு பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் பல விவசாயிகளின் வயல் நிலங்களில் இரவு,பகலாக தொடர்ச்சியாக காணிமையாளரின் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரங்களின் மூலம் மணல் அகழ்வு இடம்பெறுவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் கனியவளப் பிரிவினர் மற்றும் பொது அமைப்புகள் எவருமே இவ்விடயம் தொடர்பாக கண்டுகொள்வதில்லை எனவும் இதன் காரணமாக  அப்பாவி விவசாயிகள் பல வழிகளிலும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், நெற்செய்கை மேற்கொள்ளும் பொழுது  காட்டு யானையின் தொல்லை ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவதாகவும், வயல் அறுவடை முடிந்ததும் மணல் கொள்ளை இடம்பெறுவதாகவும் இதனால், பாரிய அளவில் வயல் நிலங்கள் சீர் செய்வதற்கான பணச் செலவு ஏற்படுகின்றது.இச்சம்பவம் தொடர்பாக  பொலிஸ் நிலையங்களிலோ அல்லது வேறு எவரிடமும் முறைப்பாடு செய்ய முடியாத நிலையில் மணல் கொள்ளையர்களினால்  அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனிமையில் தமது வயல் பகுதிகளுக்கு பார்வையிடுவதற்கு செல்ல முடியாத அச்ச நிலை தோற்றியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய தீர்வுகளை பெற்று விவசாய நிலங்களில் மணல் அகழ்வை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்  எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement