• Jan 16 2025

தையிட்டியில் சட்டவிரோத விகாரை கட்டுமானம் அகற்றப்பட வேண்டும்- கஜேந்திரகுமார் வலியுறுத்து..!

Sharmi / Dec 14th 2024, 12:58 pm
image

தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார்களின் கணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(13) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அதேவேளை தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

யாழ் மாவட்டத்தில் வீட்டுத் திட்டங்களை வழங்கும் போது ஏழை மக்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்படல் வேண்டும். குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பது விசேட கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவு - உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவித் திட்டத்தின் கீழ் யாழ் நகரத்திற்காக 2019 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பிரதான வடிகாலமைப்பு திட்டம் (Drainage Master Plan) தயாரிப்பதில் இடம பெற்ற முறைகேட்டினால் யாழ் நகர மக்கள் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்கள். இம் முறைகேடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

யாழ் நகரத்திற்கான பிரதான வடிகாலமைப்பு திட்டம் (Drainage Master Plan1.) புதியதாகத் தயாரிக்கப்படல் வேண்டும். அண்மையில் பெய்த கனமழையின்போது யாழ் நகரம் வெள்ளத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது.

அதற்கான பிரதான காரணம் உலக வங்கியின் நிதியில் முன்னெடுக்கப்பட்ட தந்திரோபாய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வடிகாலமைப்பு திட்டம் (Drainage Master Plan) முறையான தரையுயரத் தரவுகளோ மழைவீழ்ச்சித் தரவுகளோ இன்றித் தயாரிக்கப்பட்டதுடன் அவ்வாறு முறையான தரவுகள் இன்றித் தயாரிக்கப்ட்ட வடிகாலமைப்பு திட்டத்தை (Drainage Master Plan) அடிப்படையாகக் கொண்டு வடிகான்கள் அமைக்கப்பட்டமையேயாகும்.

எனவே மேற்படி குறையாடுகளைச் சீர் செய்யும் வகையில் யாழ் நகரத்திற்கான பிரதான வடிகாலமைப்பு திட்டம் (Drainage Master Plan) தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

பிரதான வடிகாலமைப்பு திட்டம் (Drainage Master Plan) தயாரிக்கப்பட்டதிலுள்ள முறைகேடுகள் தொடர்பில் விசாணை தேவை - பிரதான வடிகாலமைப்பு திட்டம் (Drainage Master Plan) தயாரிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டுமென கடந்த காலத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதா. அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

வடிகாலமைப்பு திருத்தம் செய்தல் - ஜே - 75 சுண்டிக்குழி தெற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட அச்சுக்கூட ஒழுங்கையில் காணப்படும் வடிகால் அமைப்பு சேதமடைந்துள்ளது. அதனை முற்றாக திருத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் சில பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அந்தவகையில்,

பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவு

விறாச்சிகுளம் தலவைக்குளம் நெற்கொழுகுளம் ஆகிய மூன்று குளங்களதும் நீர்மட்டத்தை ஆபத்தற்ற அளவில் பேணக்கூடிய வகையில் வெள்ள வாய்க்கால் அமைத்தல்

ஜே-352 மற்றும் ஜே-353 (கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள விறாச்சிகுளம்இ மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் ஜே-387 கிராம அலுவலர் பிரிவில் உள்ள தலவைக்குளம் மற்றும் ஜே-386 பிரிவிலுள்ள நெற்கொழுகுளம் ஆகிய மூன்று குளங்களும் மாரி காலத்தில் நிறைந்து நீர்மட்டம் உயர்வடைவதனால் நெற்செய்கையும் விவசாயமும் முழுமையாக அழிவடைகின்றது. அத்துடன் மக்கள் குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்குவதால் சுமார் 100 ற்கும் அதிகமான குடும்பங்கள் ஒவ்வொரு வருடமும் இடைத்தங்கல் முகாம்களில் தஞசமடையும் அவலநிலை தொடர்கிறது. மேலும் இக்குளத்திலுள்ள முதலைகள் வெள்ளப்பெருக்கின்போது மக்கள் குடியிருப்புக்களிற்குள் செல்வதால் பாரிய உயிராபத்தினை மக்கள் எதிர்கொள்கின்றார்கள். இப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணும்பொருட்டு வெள்ளநீர் வெளியேறும் வாய்க்கால்கள் அமைக்கப்படல் வேண்டும்.

படகு தரிப்பிடங்களில் படகுப்பாதுகாப்புக்கான கல்லணைகள் அமைத்தல்: - மூர்க்கம் கடற்கரை முனைகடற்கரை கொட்டடி கடற்கரை சுப்பர்மடம் இன்பர்சிட்ட கடற்கரை சக்கோட்டை கடற்கரை திக்கம் கடற்கரை கொத்தியால் கடற்கரை றேவடி கடற்கரை ஆதிகோவிலடி கடற்கரை தொண்டமனாறு கடற்கரை பலாலி கடற்கரை சேந்தான்குளம் கடற்கரை மாதகல் கடற்கரை ஆகிய இடங்களில் படகுகள் தரித்துநிற்கும் இடங்களில் படகுகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புக் கல்லணைகள் அமைக்கப்படல் வேண்டும்.

படகுகள் நுழையும் பகுதிகளை ஆழமாக்குதல்:

மூர்க்கம் தொடக்கம் மாதகல் வரை படகுகள் தொழிலுக்காக இறக்கப்படும் நுழைவு வான்கள் நீண்டகாலமாக ஆழப்படுத்தப்படாமையினால் படகுகள் சேதமடைகின்றன. படகுகள் சேதமடைவதனை தடுக்கும் வகையில் குறித்த இடங்கள் உடனடியாக ஆழப்படுத்தப்படல் வேண்டும்.

கொத்தியால் கடற்கரையில் படகுகள் தரிப்பிடத்தில் அகழப்பட்ட மண்ணை அப்புறப்படுத்த நடவடிகை எடுத்தல்: - வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய கடற்தொழில் அமைப்பினருக்குச் சொந்தமான படகுகள் தரித்து நிற்கும் பகுதியிலிருந்து அகழப்பட்ட மண் கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளது.

அந்த மண் மீண்டும் கடலுக்குள் சென்று படகுகள் நிறுத்தும் பகுதியை மூடுவதனால் படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுவதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இன்னமும் வழங்கவில்லை.

எனவே குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அண்மையிலுள்ள பொது அமைப்புக்களது பயன்பாட்டிற்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படல் வேண்டும்.

பருத்தித்துறை வெளிச்சவீட்டையும் அதனை அண்டிய பகுதிகளையும் விடுவித்தல்: வெளிச்சவீட்டைச் சூழவும் சுமார் 500 மீற்றர் பரப்பினை கடற்படையினர் கடந்த 1996 ஆம் ஆண்டு தொடக்கம் கையகப்படுத்தியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் கடற்தொழிலாளர்களது மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே கோரியடியில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி கடற்தொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்வதற்குரிய வகையில் குறித்த வெளிச்சவீட்டைச் சூழவுள்ள பகுதிகளை மீனவர்களது பயன்பாட்டிற்காக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புயற்காற்றினால் சேதமடைந்த வள்ளங்கள் படகுகளை திருத்துவதற்கான இழப்பீடுகள் வழங்கல். ஆண்மையில் வீசிய புயற்காறினால் வல்வெட்டித்துறை கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம் வடமத்திக்குரிய சங்கத்தினருக்குச் சொந்தமான 7 வள்ளங்கள் சேதமடைந்துள்ளமையினால் சுமார் 25 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்

வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய கடற்தொழில் அமைப்பிற்குரிய (கொத்தியால்; கடற்கரை) 4 வள்ளங்கள் படகுகள் சேதமடைந்துள்ளமையினால் சுமார் 6 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட படகுகளை திருத்தம் செய்தவற்கான நிதி உதவிகளை படகு உரிமையாளர்கள் கோருகின்றார்கள். எனவே அவர்களது வாழ்வாதாரத்தை மீளவும் பெற்றுக் கொடுக்கும் வகையில் மேற்குறித்த இழப்பீடுகளை வழங்க ஆவன செய்யப்படல் வேண்டும்.

மந்திகை – ஆனைவிழுந்தான் வீதி சேதமடைந்த நிலையில் நீண்டகாலமாக திருத்தப்படாமல் உள்ளது. வீதி சேதமடைந்துள்ளமையினால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள். இவ்வீதியை உடனடியாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு –

வெள்ளவாய்க்கால் புனரமைப்பும் வீதி புனரமைப்பும் - ஜே-352 ஜே-353 ஆகிய கிராம அலுவலர் பிரிகவுகளில் ஊடாகச் செல்லும் 250 மீற்றர் நீளமான வெள்ளவாய்க்கால் புனரமைக்கப்படுவதுடன் பொது மக்கள் போக்குவரத்துக்குச் செய்வதற்கான பாதையும் செப்பனிடப்படல் வேண்டும்.

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவு

சிறுவர் பூங்கா காணியை முழுமையாக சிறுவர் பூங்காவுக்கே வழங்க வேண்டும்

சாவகச்சேரி நகர சபையினால் 8 ஆம் வட்டாரத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட 22 பரப்புக்காணியையும் சிறுவர் பூங்காவுக்கு வழங்கப்படல் வேண்டும். அக்காணியின் ஒருபகுதியை சமுர்த்தி வங்கி அமைப்பதற்காகவென வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியை பிரதேச மக்கள் விரும்பாத காரணத்தால் அச் செயற்பாடு நிறுத்தப்படல் வேண்டும்.

குளம் ஆழப்படுத்தலும் வெள்ளவாய்க்கால் அமைத்தலும் -

ஜே-301 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள உப்புக்கேணி குளம் ஆழப்படுத்தல் மற்றும் வாய்க்கால் அமைத்து வெள்ள நீரை வெளியேற்றல். மழை காலங்களில் அக்குளத்தினைச் சுற்றியுள்ள 75 வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுவதால் அனைத்துக் குடும்பங்களும் வீடுகளைவிட்டு வெளியேறி இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்லும் நிலை தொடச்சியாகக் காணப்படுகின்றது. இப்பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மேற்படி குளம் ஆழப்படுத்தப்பட்டு மேலதிக நீர் வெளியேறும் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்படல் வேண்டும்.

கொடிகாமம் நாவலடி தவசிக்குளம் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதனைத தடுக்க நடவடிக்கை எடுத்தல்.

மழைகாலங்களில் இப்பகுதிகளில் சுமார் மூன்று அடிகளுக்குமேல் வெளள்நீர்தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் பாடசாலைகளில் தங்கவேண்டியநிலை அடிக்கடி ஏற்படுகின்றது. இவற்றுக்கு நிரந்தர தீர்வுகாணப்படவேண்டும்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியநிபுணர்கள் வைத்தியர்கள் வேலையை துறந்து மற்றும் மாற்றலாகிச் செல்லும் நிலையில் அவர்களுக்குப் பதிலாக கடமையைப் பொறுப்பேற்க வேண்டிய வைத்தியர்கள் வைத்தியநிபுணர்கள் வந்துசேராத காரணத்தால் சத்திர சிகிச்சை விடுதி மருத்துவ விடுதி குருதிச் சுத்திகரிப்பு பிரிவு சத்திர சிகிச்சைக் கூடம் என்பன மிகுந்த சிரமத்தில் இயங்குகின்றது. கடந்த மாதம்வரை சிறப்புடன் இயங்கிய சத்திரசிகிச்சைக்கூடம் விரைவில் செயலிழக்கலாம். தினமும் ஆறுக்கு மேற்பட்ட சுத்திகரிப்பு நடைபெறும் குருதிச் சுத்திகரிப்பு பிரிவின் செயற்பாடுகள் நிறுத்தப்படலாம்.

சுலுஸ் கதவுகள் நிறுவுதல் - வடக்கு மிருசுவிலில்; ஆரம்பமாகி கிழக்குவெளி நாவற்காடு கரம்பை வெங்கிராயன்வெளி இடைக்குறிச்சி மாசேரி வறணி வடக்கு முள்ளிவரை உவர்நீர்த் தடுப்பு அணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையில் நீர்மட்டத்தை பேணுவதற்காக சில இடங்களில் சுலுஸ் கதவுகள் அமைக்கப்படல் வேண்டுமென கமக்கார அமைப்புக்களால் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் குறிக்கப்பட்ட சில இடங்களில் சுலுஸ் கதவு அமைப்பதற்கான இடங்கள் அடையாளப் படுத்தப்பட்டிருந்தபோதும். இறுதியில் அவ்வாறான சுலுஸ்கதவுகள் மாசேரிப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்க வேண்டிய இடங்களில் அவை பொருத்தப்படாது அதற்கென அடையாளப் படுத்தப்பட்டிருந்த இடங்கள் மண்கொட்டி மூடப்பட்டு அணையாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் கிராமத்தில் மழைவெள்ளத்தின்போது நீர்மட்டத்தை உரியமுறையில் பேணமுடியாத நிலை காணப்படுவதாக கிராம மக்களும் விவசாயிகளும் தெரிவித்துள்ளனர்.

தீனிக்கிராய் வயல்வெளியில் தேங்கும் நீரை வெளியேற்றுவதற்காகவென இடைக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள சுலுஸ் கதவின் இரண்டு பக்கமும் பழைய இடிபாடுகள் குவிக்கப்பட்டுள்ளதால் அந்தக் கதவு செயற்படாமல் உள்ளது. ஜே-341 பிரிவில் உள்ள சுலுஸ் கதவுக்கான கட்டுமானத்தில் கதவு பொருத்தப்படவில்லை. எனவே இவ்விடயத்தினை கவனத்தில் எடுத்து பிரச்சினையைத் தீர்க்க ஆவனசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

காட்டுப்பிட்டி காட்டுவயல் முடிவிலிருந்து வறணி வடக்கு வரை தரமற்ற அணை. - மேற்படி அணை வடக்கு மிருசுவிலில் இருந்து காட்டுப்பிட்டி காட்டுவயல் வரை தரமாக அமைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனினும் காட்டுப்பிட்டி காட்டுவயல் முடிவிலிருந்து வறணி வடக்கு வரை சிறியதாகவும் வெள்ளநீரால் உடைத்துச் செல்லக்கூடியதாகவும் தரமற்றதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வடக்கு மிருசுவிலில் இருந்து காட்டுப்பிட்டி காட்டுவயல் வரை தடுக்கப்படும் உவர்நீரானது காட்டுப்பிட்டி காட்டுவயலில் இருந்து வறணி வடக்கு வரையான சிறிய அணைக்கு மேலால் வழிந்து நெல்வயல்களுக்குள் செல்கின்றது. இக்குறைபாட்டை உடனடியாகச் சீர்செய்து அணையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தூர்வடைந்த வாய்க்கால்கள் திருத்த வேண்டும்.

இந்த அணை அமைக்கப்பட்டுள்ளபோதும் நெல்வயல்களில் தேங்கும் நீர் வெளியேறுவதற்கான வாய்க்கால்கள் கடந்த 40 வருடங்களாக தூர்வடைந்த நிலையில் உள்ளதால் மேலதிக நீரை வெளியேற்ற முடியாத நிலை காணப்படுகின்றதெனவும் அதனால் நெற்செய்கையை மேற்கொள்ள முடியாத நிலை தொடர்கின்றதெனவும் விவசாயிகள் தெரிவித்தனர். அதனால் கீழ்வரும் வாய்க்கால்களைத் திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரெல்லை (கொடிக்காடு) வாய்க்கால் திருத்த வேண்டும். றால்பிட்டி சருகு (சமாதியடி) வாய்க்கால் திருத்த வேண்டும். தீனிக்கிராய் வயல் வாய்க்கால் திருத்த வேண்டும்.

மேற்படி வாய்க்கால்கள் திருத்தப்படாமையினால் சுமார் 265 ஏக்கர் வயல்களில் போர் முடிவடைந்து 15 ஆண்டுகளின் பின்னரும் நெற்செய்கையை மேற்கொள்ள முடியாதுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாய வீதிகள் திருத்துதல் - ஜே-341 இடைக்குறிச்சி வீதிகள் உரெல்லைத்தெரு 5கி.மீ உடனடியாகத் திருத்தப்படல் வேண்டும் - வாழைத்தோட்டச்சந்தி வறணி வடக்கிலிருந்து ஆரம்பமாகிச் செல்லும் மாசேரி - இடைக்குறிச்சி ஊர்ரெல்லைத்தெரு) நவல்மோட்டை கிழக்கு 1250 மீற்றர் நீளமான வீதி திருத்தப்படவில்லை.

வாழைத் தோட்டம் சந்தியிலிருந்து மாசேரிவரை செல்லும் ரயித்தார் வீதி எனப்படும் வீதி 2கி.மீ வீதி மணலும் கல்லும் குன்றும் குழியுமாக உள்ளது.

மாசேரி சந்தியிலிருந்து மாணிக்காவில்குளம் வரை செல்லும் மாணிக்காவில் வீதி 1 கி.மீ மணலும் கற்களும் குன்றும் குழியுமாக உள்ளது.

மாணிக்காவில் குளத்தடியிலிருந்து – குருநாதகோவில் வரை செல்லும் காட்டுப்புலம் வீதி 2 கி.மீ திருத்தப்படவில்லை.

இடைக்குறிச்சி ஜே-341 இல் கயலிகுளம் வீதி 500 மீற்றர் திருத்தப்படல் வேண்டும்.

இவ்வீதிகள் கடந்த 75 வருடமாகத் திருத்தப்படவில்லை.

ஜே-339 வறணி வடக்கு வீதிகள்

கறுக்காய் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து அதன் பின்புறுமாகச் செல்லும் வீதி சுமார் 1 கி.மீ தூரம் கும்பிட்டான் பிள்ளையார் ஆலயம் வரை திருத்தப்படல் வேண்டும். இவ்வீதியால் தினமும் சராசரி 1000 பேர் பயணம் செய்கின்றார்களென கிராம மக்கள் தெரிவித்தனர். மேற்படி வீதிகளை பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயன்படுத்துகின்றார்கள். ஞானவைரவர் கோவில் செல்லும் 400 மீற்றர் நீளமான வீதி புனரமைப்பும் - 700 மீற்றர் நீளமான வீதியாக அங்கீகரித்து பிரதேச சபையில் அனுமதி பெறப்படல் வேண்டும். இவ்வீதியை சுமார் 40 விவசாயிகள் பயன்படுத்துகின்றார்கள். அத்துடன் கோவிலுக்குச் செல்லும் பல நூற்றுக்கணக்கான மக்கள் இந்த வீதி சீரின்மையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள். எனவே விவசாயத்துறையின் மேம்பாடு கருதி மேற்படி வீதிகளை உடனடியாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

கள்ளமண் அகழ்வைக் கட்டுப்படுத்தல்.

கரம்பைக்குறிச்சி கிழக்குவெளி நாவற்காடு கிழக்குவெளி இடைக்குறிச்சி கிழக்குவெளி வடவறணி தம்பான் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் மேட்டுக்காணிகளில் தொடர்ச்சியாக இடம்பெறும் கள்ளமண் அகழ்வு நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடைகள் அழிவடையும் நிலை - கால்நடைகளைக் கட்டிவளர்க்கும் மேட்டுநிலப்பகுதிகள் அனைத்தும் கள்ளமண் அகழ்வோரால் மண் அகழப்படுவதனால் கால்நடைகள் கோழிகளை வளர்க்க முடியாது அழிவடையும் நிலை ஏற்படுகின்றது.

மண் கொள்ளையர்களுக்கும் பொலீசாருக்கும் தொடர்பு - மேற்படி சம்பவங்கள் தொடர்பில் பொலீசாருக்கு விவசாயிகள் முறையிட்டபோதும் பொலீசார் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதுடன் முறைப்பாடு செய்தவர்களைப் பற்றிய விபரங்கள் உடனுக்குடன் மண் கொள்ளையர்களுக்குத் தெரியவருவதாகவும் அதனால் மண் கொள்ளையர்களால் உயிர் அச்சுறுத்தல்களை தாம் எதிர்கொள்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

உடுவில் பிரதேச செயலர் பிரிவு

வீதி புனரமைப்பு – கந்தரோடையில் ஜே-200 கிராம அலுவலர் பிரிவில் கந்தையா உபாத்தியார் வீதியில் சுமார் 15 மீற்றர் நீளமான பகுதி வெள்ளநீர் வடந்தோடமுடியாத வகையில் தாழ்வாக அமைக்கப்பட்டள்ளது. அதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. இதனை திருத்தியமைக்க வேண்டும்.

மதகு சீரமைத்தல் - உடுவில் - ஆலடி மானிப்பாயிலுள்ள மதகு மூடப்பட்டுள்ளமையினால் மக்கள் வெள்ளப்பெருக்கு பாதிப்புக்களை அடிக்கடி சந்தித்து வருகின்றனர். ஜே-182, ஜே-183 ஜே-184 ஆகிய பகுதிகளில் பெருமளவு வெள்ளநீர் வெளியேறாமல் தேங்குவதால் மக்கள் பெரும் பாதிப்புக்களை அடிக்கடி சந்திக்கின்றார்கள். எனவே இந்த மதகினை சீரமைக்க வேண்டும்.

பாதுகாப்பான புகையிரதக் கடவை அமைத்தல் - மல்லாகம் சாளம்பை முருகன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள புகையிரதக் கடவை பாதுகாப்பற்றதாக உள்ளது. அதனைத் பாதுகாப்பான கடவையாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவு

எரிபொருள் நிரப்பு நிலையம் அமைத்தல் - எழுவைதீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பயனாளிகளின் மண்ணெண்ணை தேவையை நிறைவு செய்யும்பொருட்டு மண்ணெண்ணை நிரப்பு நிலையம் அமைத்துத் தருமாறு கோரியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

குளிர்சாதன அறை அமைக்க நடவடிக்கை - எழுவைதீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திலுள்ள 250 அங்கத்தவர்களது பயன்பாட்டிற்காக கடலுணவுகளை பாதுகாத்துவைப்பதற்கான குளிர்சாதனப் பெட்டி பற்றாக்குறையாக உள்ளதாகவும் எனவே அந்த பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் குளிர்சாதன அறை அமைத்துத் தருமாறு கோரியுள்ளார்கள். இத்திட்டதை நடைமுறைப்படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவு

முறையான குப்பையகற்றலை உறுதிப்படுத்தல் - நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் குப்பைகள் அகற்றப்படும் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லையென பொதுமக்கள் விசனமடைந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

நயினாதீவு கிராமிய கடற்தொழில் அமைப்பினரது கோரிக்கை

சட்டவிரோத மீன்பிடி கட்டுப்படுத்தப்படல் வேண்டும் - நயினாதீவு கடலில் வெளிச்சம்பாச்சி மீன்பிடியில் ஈடுபடுவதனாலும் கணவாய்குரிய குழைகளை கடலில் கட்டிவைப்பதனாலும் மீனவர்களது வழிச்சர் வலை தொழில் பாதிப்படைகின்றது. அதனால் நயினாதீவு மீனவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாட்டினை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – நயினாதீவில் நடைமுறைப்படுத்தப்படும் கடல்நீர் சுத்திரகரிப்புத் திட்டமானது குடிநீர் இல்லாத பகுதிகளான 5, 6, 7 ஆம் வட்டாரங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது நயினாதீவில் தண்ணீர் இருக்கும் இடங்களுக்கும் குடிநீர் விநியோகம் இடம்பெறுவதனால் நன்னீர் அற்ற 5, 6, 7 ஆம் வட்டார மக்களுக்கு குடிநீர் போதியளவு கிடைப்பதில்லை. கடந்த காலத்தில் ஒரு மணிநேரம் வழங்கப்பட்ட குடிநீர் தற்போது 20 நிமிடங்கள் கூட வழங்கப்படுவதில்லை. அதனால் மக்கள் பெரும் அவலத்தை எதிர்கொண்டுள்ளனர். இப்பிரச்சினையை தீர்க்க உடன் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

மேற்படி கோரிக்கைகள் உட்பட மேலும் பல கோரிக்கைகள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியால்  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

தையிட்டியில் சட்டவிரோத விகாரை கட்டுமானம் அகற்றப்பட வேண்டும்- கஜேந்திரகுமார் வலியுறுத்து. தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார்களின் கணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(13) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.அதேவேளை தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,யாழ் மாவட்டத்தில் வீட்டுத் திட்டங்களை வழங்கும் போது ஏழை மக்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்படல் வேண்டும். குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பது விசேட கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவு - உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவித் திட்டத்தின் கீழ் யாழ் நகரத்திற்காக 2019 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பிரதான வடிகாலமைப்பு திட்டம் (Drainage Master Plan) தயாரிப்பதில் இடம பெற்ற முறைகேட்டினால் யாழ் நகர மக்கள் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்கள். இம் முறைகேடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.யாழ் நகரத்திற்கான பிரதான வடிகாலமைப்பு திட்டம் (Drainage Master Plan1.) புதியதாகத் தயாரிக்கப்படல் வேண்டும். அண்மையில் பெய்த கனமழையின்போது யாழ் நகரம் வெள்ளத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது.அதற்கான பிரதான காரணம் உலக வங்கியின் நிதியில் முன்னெடுக்கப்பட்ட தந்திரோபாய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வடிகாலமைப்பு திட்டம் (Drainage Master Plan) முறையான தரையுயரத் தரவுகளோ மழைவீழ்ச்சித் தரவுகளோ இன்றித் தயாரிக்கப்பட்டதுடன் அவ்வாறு முறையான தரவுகள் இன்றித் தயாரிக்கப்ட்ட வடிகாலமைப்பு திட்டத்தை (Drainage Master Plan) அடிப்படையாகக் கொண்டு வடிகான்கள் அமைக்கப்பட்டமையேயாகும்.எனவே மேற்படி குறையாடுகளைச் சீர் செய்யும் வகையில் யாழ் நகரத்திற்கான பிரதான வடிகாலமைப்பு திட்டம் (Drainage Master Plan) தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.பிரதான வடிகாலமைப்பு திட்டம் (Drainage Master Plan) தயாரிக்கப்பட்டதிலுள்ள முறைகேடுகள் தொடர்பில் விசாணை தேவை - பிரதான வடிகாலமைப்பு திட்டம் (Drainage Master Plan) தயாரிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டுமென கடந்த காலத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதா. அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.வடிகாலமைப்பு திருத்தம் செய்தல் - ஜே - 75 சுண்டிக்குழி தெற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட அச்சுக்கூட ஒழுங்கையில் காணப்படும் வடிகால் அமைப்பு சேதமடைந்துள்ளது. அதனை முற்றாக திருத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.மேலும் சில பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.அந்தவகையில்,பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவுவிறாச்சிகுளம் தலவைக்குளம் நெற்கொழுகுளம் ஆகிய மூன்று குளங்களதும் நீர்மட்டத்தை ஆபத்தற்ற அளவில் பேணக்கூடிய வகையில் வெள்ள வாய்க்கால் அமைத்தல்ஜே-352 மற்றும் ஜே-353 (கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள விறாச்சிகுளம்இ மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் ஜே-387 கிராம அலுவலர் பிரிவில் உள்ள தலவைக்குளம் மற்றும் ஜே-386 பிரிவிலுள்ள நெற்கொழுகுளம் ஆகிய மூன்று குளங்களும் மாரி காலத்தில் நிறைந்து நீர்மட்டம் உயர்வடைவதனால் நெற்செய்கையும் விவசாயமும் முழுமையாக அழிவடைகின்றது. அத்துடன் மக்கள் குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்குவதால் சுமார் 100 ற்கும் அதிகமான குடும்பங்கள் ஒவ்வொரு வருடமும் இடைத்தங்கல் முகாம்களில் தஞசமடையும் அவலநிலை தொடர்கிறது. மேலும் இக்குளத்திலுள்ள முதலைகள் வெள்ளப்பெருக்கின்போது மக்கள் குடியிருப்புக்களிற்குள் செல்வதால் பாரிய உயிராபத்தினை மக்கள் எதிர்கொள்கின்றார்கள். இப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணும்பொருட்டு வெள்ளநீர் வெளியேறும் வாய்க்கால்கள் அமைக்கப்படல் வேண்டும்.படகு தரிப்பிடங்களில் படகுப்பாதுகாப்புக்கான கல்லணைகள் அமைத்தல்: - மூர்க்கம் கடற்கரை முனைகடற்கரை கொட்டடி கடற்கரை சுப்பர்மடம் இன்பர்சிட்ட கடற்கரை சக்கோட்டை கடற்கரை திக்கம் கடற்கரை கொத்தியால் கடற்கரை றேவடி கடற்கரை ஆதிகோவிலடி கடற்கரை தொண்டமனாறு கடற்கரை பலாலி கடற்கரை சேந்தான்குளம் கடற்கரை மாதகல் கடற்கரை ஆகிய இடங்களில் படகுகள் தரித்துநிற்கும் இடங்களில் படகுகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புக் கல்லணைகள் அமைக்கப்படல் வேண்டும்.படகுகள் நுழையும் பகுதிகளை ஆழமாக்குதல்:மூர்க்கம் தொடக்கம் மாதகல் வரை படகுகள் தொழிலுக்காக இறக்கப்படும் நுழைவு வான்கள் நீண்டகாலமாக ஆழப்படுத்தப்படாமையினால் படகுகள் சேதமடைகின்றன. படகுகள் சேதமடைவதனை தடுக்கும் வகையில் குறித்த இடங்கள் உடனடியாக ஆழப்படுத்தப்படல் வேண்டும்.கொத்தியால் கடற்கரையில் படகுகள் தரிப்பிடத்தில் அகழப்பட்ட மண்ணை அப்புறப்படுத்த நடவடிகை எடுத்தல்: - வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய கடற்தொழில் அமைப்பினருக்குச் சொந்தமான படகுகள் தரித்து நிற்கும் பகுதியிலிருந்து அகழப்பட்ட மண் கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளது. அந்த மண் மீண்டும் கடலுக்குள் சென்று படகுகள் நிறுத்தும் பகுதியை மூடுவதனால் படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுவதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இன்னமும் வழங்கவில்லை. எனவே குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அண்மையிலுள்ள பொது அமைப்புக்களது பயன்பாட்டிற்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படல் வேண்டும்.பருத்தித்துறை வெளிச்சவீட்டையும் அதனை அண்டிய பகுதிகளையும் விடுவித்தல்: வெளிச்சவீட்டைச் சூழவும் சுமார் 500 மீற்றர் பரப்பினை கடற்படையினர் கடந்த 1996 ஆம் ஆண்டு தொடக்கம் கையகப்படுத்தியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் கடற்தொழிலாளர்களது மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கோரியடியில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி கடற்தொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்வதற்குரிய வகையில் குறித்த வெளிச்சவீட்டைச் சூழவுள்ள பகுதிகளை மீனவர்களது பயன்பாட்டிற்காக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.புயற்காற்றினால் சேதமடைந்த வள்ளங்கள் படகுகளை திருத்துவதற்கான இழப்பீடுகள் வழங்கல். ஆண்மையில் வீசிய புயற்காறினால் வல்வெட்டித்துறை கடற்தொழில் கூட்டுறவுச் சங்கம் வடமத்திக்குரிய சங்கத்தினருக்குச் சொந்தமான 7 வள்ளங்கள் சேதமடைந்துள்ளமையினால் சுமார் 25 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய கடற்தொழில் அமைப்பிற்குரிய (கொத்தியால்; கடற்கரை) 4 வள்ளங்கள் படகுகள் சேதமடைந்துள்ளமையினால் சுமார் 6 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட படகுகளை திருத்தம் செய்தவற்கான நிதி உதவிகளை படகு உரிமையாளர்கள் கோருகின்றார்கள். எனவே அவர்களது வாழ்வாதாரத்தை மீளவும் பெற்றுக் கொடுக்கும் வகையில் மேற்குறித்த இழப்பீடுகளை வழங்க ஆவன செய்யப்படல் வேண்டும்.மந்திகை – ஆனைவிழுந்தான் வீதி சேதமடைந்த நிலையில் நீண்டகாலமாக திருத்தப்படாமல் உள்ளது. வீதி சேதமடைந்துள்ளமையினால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள். இவ்வீதியை உடனடியாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு –வெள்ளவாய்க்கால் புனரமைப்பும் வீதி புனரமைப்பும் - ஜே-352 ஜே-353 ஆகிய கிராம அலுவலர் பிரிகவுகளில் ஊடாகச் செல்லும் 250 மீற்றர் நீளமான வெள்ளவாய்க்கால் புனரமைக்கப்படுவதுடன் பொது மக்கள் போக்குவரத்துக்குச் செய்வதற்கான பாதையும் செப்பனிடப்படல் வேண்டும்.சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுசிறுவர் பூங்கா காணியை முழுமையாக சிறுவர் பூங்காவுக்கே வழங்க வேண்டும்சாவகச்சேரி நகர சபையினால் 8 ஆம் வட்டாரத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட 22 பரப்புக்காணியையும் சிறுவர் பூங்காவுக்கு வழங்கப்படல் வேண்டும். அக்காணியின் ஒருபகுதியை சமுர்த்தி வங்கி அமைப்பதற்காகவென வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியை பிரதேச மக்கள் விரும்பாத காரணத்தால் அச் செயற்பாடு நிறுத்தப்படல் வேண்டும்.குளம் ஆழப்படுத்தலும் வெள்ளவாய்க்கால் அமைத்தலும் -ஜே-301 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள உப்புக்கேணி குளம் ஆழப்படுத்தல் மற்றும் வாய்க்கால் அமைத்து வெள்ள நீரை வெளியேற்றல். மழை காலங்களில் அக்குளத்தினைச் சுற்றியுள்ள 75 வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுவதால் அனைத்துக் குடும்பங்களும் வீடுகளைவிட்டு வெளியேறி இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்லும் நிலை தொடச்சியாகக் காணப்படுகின்றது. இப்பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மேற்படி குளம் ஆழப்படுத்தப்பட்டு மேலதிக நீர் வெளியேறும் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்படல் வேண்டும்.கொடிகாமம் நாவலடி தவசிக்குளம் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதனைத தடுக்க நடவடிக்கை எடுத்தல்.மழைகாலங்களில் இப்பகுதிகளில் சுமார் மூன்று அடிகளுக்குமேல் வெளள்நீர்தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் பாடசாலைகளில் தங்கவேண்டியநிலை அடிக்கடி ஏற்படுகின்றது. இவற்றுக்கு நிரந்தர தீர்வுகாணப்படவேண்டும்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியநிபுணர்கள் வைத்தியர்கள் வேலையை துறந்து மற்றும் மாற்றலாகிச் செல்லும் நிலையில் அவர்களுக்குப் பதிலாக கடமையைப் பொறுப்பேற்க வேண்டிய வைத்தியர்கள் வைத்தியநிபுணர்கள் வந்துசேராத காரணத்தால் சத்திர சிகிச்சை விடுதி மருத்துவ விடுதி குருதிச் சுத்திகரிப்பு பிரிவு சத்திர சிகிச்சைக் கூடம் என்பன மிகுந்த சிரமத்தில் இயங்குகின்றது. கடந்த மாதம்வரை சிறப்புடன் இயங்கிய சத்திரசிகிச்சைக்கூடம் விரைவில் செயலிழக்கலாம். தினமும் ஆறுக்கு மேற்பட்ட சுத்திகரிப்பு நடைபெறும் குருதிச் சுத்திகரிப்பு பிரிவின் செயற்பாடுகள் நிறுத்தப்படலாம்.சுலுஸ் கதவுகள் நிறுவுதல் - வடக்கு மிருசுவிலில்; ஆரம்பமாகி கிழக்குவெளி நாவற்காடு கரம்பை வெங்கிராயன்வெளி இடைக்குறிச்சி மாசேரி வறணி வடக்கு முள்ளிவரை உவர்நீர்த் தடுப்பு அணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையில் நீர்மட்டத்தை பேணுவதற்காக சில இடங்களில் சுலுஸ் கதவுகள் அமைக்கப்படல் வேண்டுமென கமக்கார அமைப்புக்களால் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் குறிக்கப்பட்ட சில இடங்களில் சுலுஸ் கதவு அமைப்பதற்கான இடங்கள் அடையாளப் படுத்தப்பட்டிருந்தபோதும். இறுதியில் அவ்வாறான சுலுஸ்கதவுகள் மாசேரிப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்க வேண்டிய இடங்களில் அவை பொருத்தப்படாது அதற்கென அடையாளப் படுத்தப்பட்டிருந்த இடங்கள் மண்கொட்டி மூடப்பட்டு அணையாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் கிராமத்தில் மழைவெள்ளத்தின்போது நீர்மட்டத்தை உரியமுறையில் பேணமுடியாத நிலை காணப்படுவதாக கிராம மக்களும் விவசாயிகளும் தெரிவித்துள்ளனர்.தீனிக்கிராய் வயல்வெளியில் தேங்கும் நீரை வெளியேற்றுவதற்காகவென இடைக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள சுலுஸ் கதவின் இரண்டு பக்கமும் பழைய இடிபாடுகள் குவிக்கப்பட்டுள்ளதால் அந்தக் கதவு செயற்படாமல் உள்ளது. ஜே-341 பிரிவில் உள்ள சுலுஸ் கதவுக்கான கட்டுமானத்தில் கதவு பொருத்தப்படவில்லை. எனவே இவ்விடயத்தினை கவனத்தில் எடுத்து பிரச்சினையைத் தீர்க்க ஆவனசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.காட்டுப்பிட்டி காட்டுவயல் முடிவிலிருந்து வறணி வடக்கு வரை தரமற்ற அணை. - மேற்படி அணை வடக்கு மிருசுவிலில் இருந்து காட்டுப்பிட்டி காட்டுவயல் வரை தரமாக அமைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனினும் காட்டுப்பிட்டி காட்டுவயல் முடிவிலிருந்து வறணி வடக்கு வரை சிறியதாகவும் வெள்ளநீரால் உடைத்துச் செல்லக்கூடியதாகவும் தரமற்றதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வடக்கு மிருசுவிலில் இருந்து காட்டுப்பிட்டி காட்டுவயல் வரை தடுக்கப்படும் உவர்நீரானது காட்டுப்பிட்டி காட்டுவயலில் இருந்து வறணி வடக்கு வரையான சிறிய அணைக்கு மேலால் வழிந்து நெல்வயல்களுக்குள் செல்கின்றது. இக்குறைபாட்டை உடனடியாகச் சீர்செய்து அணையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.தூர்வடைந்த வாய்க்கால்கள் திருத்த வேண்டும்.இந்த அணை அமைக்கப்பட்டுள்ளபோதும் நெல்வயல்களில் தேங்கும் நீர் வெளியேறுவதற்கான வாய்க்கால்கள் கடந்த 40 வருடங்களாக தூர்வடைந்த நிலையில் உள்ளதால் மேலதிக நீரை வெளியேற்ற முடியாத நிலை காணப்படுகின்றதெனவும் அதனால் நெற்செய்கையை மேற்கொள்ள முடியாத நிலை தொடர்கின்றதெனவும் விவசாயிகள் தெரிவித்தனர். அதனால் கீழ்வரும் வாய்க்கால்களைத் திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊரெல்லை (கொடிக்காடு) வாய்க்கால் திருத்த வேண்டும். றால்பிட்டி சருகு (சமாதியடி) வாய்க்கால் திருத்த வேண்டும். தீனிக்கிராய் வயல் வாய்க்கால் திருத்த வேண்டும்.மேற்படி வாய்க்கால்கள் திருத்தப்படாமையினால் சுமார் 265 ஏக்கர் வயல்களில் போர் முடிவடைந்து 15 ஆண்டுகளின் பின்னரும் நெற்செய்கையை மேற்கொள்ள முடியாதுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.விவசாய வீதிகள் திருத்துதல் - ஜே-341 இடைக்குறிச்சி வீதிகள் உரெல்லைத்தெரு 5கி.மீ உடனடியாகத் திருத்தப்படல் வேண்டும் - வாழைத்தோட்டச்சந்தி வறணி வடக்கிலிருந்து ஆரம்பமாகிச் செல்லும் மாசேரி - இடைக்குறிச்சி ஊர்ரெல்லைத்தெரு) நவல்மோட்டை கிழக்கு 1250 மீற்றர் நீளமான வீதி திருத்தப்படவில்லை.வாழைத் தோட்டம் சந்தியிலிருந்து மாசேரிவரை செல்லும் ரயித்தார் வீதி எனப்படும் வீதி 2கி.மீ வீதி மணலும் கல்லும் குன்றும் குழியுமாக உள்ளது.மாசேரி சந்தியிலிருந்து மாணிக்காவில்குளம் வரை செல்லும் மாணிக்காவில் வீதி 1 கி.மீ மணலும் கற்களும் குன்றும் குழியுமாக உள்ளது.மாணிக்காவில் குளத்தடியிலிருந்து – குருநாதகோவில் வரை செல்லும் காட்டுப்புலம் வீதி 2 கி.மீ திருத்தப்படவில்லை.இடைக்குறிச்சி ஜே-341 இல் கயலிகுளம் வீதி 500 மீற்றர் திருத்தப்படல் வேண்டும்.இவ்வீதிகள் கடந்த 75 வருடமாகத் திருத்தப்படவில்லை.ஜே-339 வறணி வடக்கு வீதிகள்கறுக்காய் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து அதன் பின்புறுமாகச் செல்லும் வீதி சுமார் 1 கி.மீ தூரம் கும்பிட்டான் பிள்ளையார் ஆலயம் வரை திருத்தப்படல் வேண்டும். இவ்வீதியால் தினமும் சராசரி 1000 பேர் பயணம் செய்கின்றார்களென கிராம மக்கள் தெரிவித்தனர். மேற்படி வீதிகளை பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயன்படுத்துகின்றார்கள். ஞானவைரவர் கோவில் செல்லும் 400 மீற்றர் நீளமான வீதி புனரமைப்பும் - 700 மீற்றர் நீளமான வீதியாக அங்கீகரித்து பிரதேச சபையில் அனுமதி பெறப்படல் வேண்டும். இவ்வீதியை சுமார் 40 விவசாயிகள் பயன்படுத்துகின்றார்கள். அத்துடன் கோவிலுக்குச் செல்லும் பல நூற்றுக்கணக்கான மக்கள் இந்த வீதி சீரின்மையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள். எனவே விவசாயத்துறையின் மேம்பாடு கருதி மேற்படி வீதிகளை உடனடியாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.கள்ளமண் அகழ்வைக் கட்டுப்படுத்தல்.கரம்பைக்குறிச்சி கிழக்குவெளி நாவற்காடு கிழக்குவெளி இடைக்குறிச்சி கிழக்குவெளி வடவறணி தம்பான் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் மேட்டுக்காணிகளில் தொடர்ச்சியாக இடம்பெறும் கள்ளமண் அகழ்வு நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கால்நடைகள் அழிவடையும் நிலை - கால்நடைகளைக் கட்டிவளர்க்கும் மேட்டுநிலப்பகுதிகள் அனைத்தும் கள்ளமண் அகழ்வோரால் மண் அகழப்படுவதனால் கால்நடைகள் கோழிகளை வளர்க்க முடியாது அழிவடையும் நிலை ஏற்படுகின்றது.மண் கொள்ளையர்களுக்கும் பொலீசாருக்கும் தொடர்பு - மேற்படி சம்பவங்கள் தொடர்பில் பொலீசாருக்கு விவசாயிகள் முறையிட்டபோதும் பொலீசார் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதுடன் முறைப்பாடு செய்தவர்களைப் பற்றிய விபரங்கள் உடனுக்குடன் மண் கொள்ளையர்களுக்குத் தெரியவருவதாகவும் அதனால் மண் கொள்ளையர்களால் உயிர் அச்சுறுத்தல்களை தாம் எதிர்கொள்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.உடுவில் பிரதேச செயலர் பிரிவுவீதி புனரமைப்பு – கந்தரோடையில் ஜே-200 கிராம அலுவலர் பிரிவில் கந்தையா உபாத்தியார் வீதியில் சுமார் 15 மீற்றர் நீளமான பகுதி வெள்ளநீர் வடந்தோடமுடியாத வகையில் தாழ்வாக அமைக்கப்பட்டள்ளது. அதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. இதனை திருத்தியமைக்க வேண்டும்.மதகு சீரமைத்தல் - உடுவில் - ஆலடி மானிப்பாயிலுள்ள மதகு மூடப்பட்டுள்ளமையினால் மக்கள் வெள்ளப்பெருக்கு பாதிப்புக்களை அடிக்கடி சந்தித்து வருகின்றனர். ஜே-182, ஜே-183 ஜே-184 ஆகிய பகுதிகளில் பெருமளவு வெள்ளநீர் வெளியேறாமல் தேங்குவதால் மக்கள் பெரும் பாதிப்புக்களை அடிக்கடி சந்திக்கின்றார்கள். எனவே இந்த மதகினை சீரமைக்க வேண்டும்.பாதுகாப்பான புகையிரதக் கடவை அமைத்தல் - மல்லாகம் சாளம்பை முருகன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள புகையிரதக் கடவை பாதுகாப்பற்றதாக உள்ளது. அதனைத் பாதுகாப்பான கடவையாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுஎரிபொருள் நிரப்பு நிலையம் அமைத்தல் - எழுவைதீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பயனாளிகளின் மண்ணெண்ணை தேவையை நிறைவு செய்யும்பொருட்டு மண்ணெண்ணை நிரப்பு நிலையம் அமைத்துத் தருமாறு கோரியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.குளிர்சாதன அறை அமைக்க நடவடிக்கை - எழுவைதீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திலுள்ள 250 அங்கத்தவர்களது பயன்பாட்டிற்காக கடலுணவுகளை பாதுகாத்துவைப்பதற்கான குளிர்சாதனப் பெட்டி பற்றாக்குறையாக உள்ளதாகவும் எனவே அந்த பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் குளிர்சாதன அறை அமைத்துத் தருமாறு கோரியுள்ளார்கள். இத்திட்டதை நடைமுறைப்படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.நல்லூர் பிரதேச செயலர் பிரிவுமுறையான குப்பையகற்றலை உறுதிப்படுத்தல் - நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் குப்பைகள் அகற்றப்படும் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லையென பொதுமக்கள் விசனமடைந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.நயினாதீவு கிராமிய கடற்தொழில் அமைப்பினரது கோரிக்கைசட்டவிரோத மீன்பிடி கட்டுப்படுத்தப்படல் வேண்டும் - நயினாதீவு கடலில் வெளிச்சம்பாச்சி மீன்பிடியில் ஈடுபடுவதனாலும் கணவாய்குரிய குழைகளை கடலில் கட்டிவைப்பதனாலும் மீனவர்களது வழிச்சர் வலை தொழில் பாதிப்படைகின்றது. அதனால் நயினாதீவு மீனவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.குடிநீர் தட்டுப்பாட்டினை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – நயினாதீவில் நடைமுறைப்படுத்தப்படும் கடல்நீர் சுத்திரகரிப்புத் திட்டமானது குடிநீர் இல்லாத பகுதிகளான 5, 6, 7 ஆம் வட்டாரங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது நயினாதீவில் தண்ணீர் இருக்கும் இடங்களுக்கும் குடிநீர் விநியோகம் இடம்பெறுவதனால் நன்னீர் அற்ற 5, 6, 7 ஆம் வட்டார மக்களுக்கு குடிநீர் போதியளவு கிடைப்பதில்லை. கடந்த காலத்தில் ஒரு மணிநேரம் வழங்கப்பட்ட குடிநீர் தற்போது 20 நிமிடங்கள் கூட வழங்கப்படுவதில்லை. அதனால் மக்கள் பெரும் அவலத்தை எதிர்கொண்டுள்ளனர். இப்பிரச்சினையை தீர்க்க உடன் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.மேற்படி கோரிக்கைகள் உட்பட மேலும் பல கோரிக்கைகள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியால்  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement