• May 20 2024

ஐ.எம்.எப். கலந்துரையாடல் வெற்றி..! – நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு samugammedia

Chithra / Oct 18th 2023, 10:44 am
image

Advertisement

 

இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வதற்கான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நோக்கில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி அடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இரண்டாம் தவணை எதிர்வரும் அல்லது இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஆழமான பொருளாதார நெருக்கடியை இலங்கையால் ஒரே இரவில் சமாளிக்க முடியாது என்றும், எனவே ஸ்திரத்தன்மை மற்றும் இயல்புநிலையை மீட்டெடுக்க பல சர்வதேச நாடுகளுடன் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த வருடம் இலங்கையில் இருந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. சில வேறுபாடுகளை களைவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான விவாதங்கள் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஐ.எம்.எப். கலந்துரையாடல் வெற்றி. – நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு samugammedia  இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வதற்கான ஊழியர் மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நோக்கில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றி அடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இரண்டாம் தவணை எதிர்வரும் அல்லது இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ஆழமான பொருளாதார நெருக்கடியை இலங்கையால் ஒரே இரவில் சமாளிக்க முடியாது என்றும், எனவே ஸ்திரத்தன்மை மற்றும் இயல்புநிலையை மீட்டெடுக்க பல சர்வதேச நாடுகளுடன் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.கடந்த வருடம் இலங்கையில் இருந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. சில வேறுபாடுகளை களைவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான விவாதங்கள் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement