உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 18 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் 8 பேர் , சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் , சி.ஐ.டி பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியசேகர உட்பட்ட 8 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இவ்வாறு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ்.தெஹிதெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அரசினால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு உடனடியாக இடமாற்றம். வெளியான அறிவிப்பு. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 18 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் 8 பேர் , சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் , சி.ஐ.டி பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியசேகர உட்பட்ட 8 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இவ்வாறு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ்.தெஹிதெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அரசினால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் புதிய நியமனங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.