• Nov 24 2024

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விடுத்த முக்கிய அறிவிப்பு!

Tamil nila / Oct 5th 2024, 9:46 pm
image

லெபனானில் நடத்தப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து தங்களது நிறுவன விமானங்களில் பயணிக்கும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வோக்கி டோக்கிகள் எடுத்துச் செல்ல எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது.

டுபாயிலிருந்து அல்லது டுபாய் வழியாக செல்லும் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் பேஜர்கள் மற்றும் வோக்கி டோக்கிகளைத் தங்களுடன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது' என டுபாயைச் சேர்ந்த விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு லெபனான் மற்றும் சிரியாவில் பேஜர்கள், வோக்கி டோக்கிகள் போன்ற தொலை தொடர்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 37 பேர் உயிரிழந்து 3,000 பேர் வரை காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள எமிரேட்ஸ் எயாரலைன்ஸ் நிறுவனம், “தடை செய்யப்பட்ட இந்தப் பொருட்கள் பயணிகளின் கைப்பைகள், உடைமைகளில் இருப்பது கண்டறியப்பட்டால் அவை டுபாய் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்படும்” என்றும் கூறியுள்ளது.


எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விடுத்த முக்கிய அறிவிப்பு லெபனானில் நடத்தப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து தங்களது நிறுவன விமானங்களில் பயணிக்கும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வோக்கி டோக்கிகள் எடுத்துச் செல்ல எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது.டுபாயிலிருந்து அல்லது டுபாய் வழியாக செல்லும் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் பேஜர்கள் மற்றும் வோக்கி டோக்கிகளைத் தங்களுடன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது' என டுபாயைச் சேர்ந்த விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.சில நாட்களுக்கு முன்பு லெபனான் மற்றும் சிரியாவில் பேஜர்கள், வோக்கி டோக்கிகள் போன்ற தொலை தொடர்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 37 பேர் உயிரிழந்து 3,000 பேர் வரை காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்பட்டது.இதனைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள எமிரேட்ஸ் எயாரலைன்ஸ் நிறுவனம், “தடை செய்யப்பட்ட இந்தப் பொருட்கள் பயணிகளின் கைப்பைகள், உடைமைகளில் இருப்பது கண்டறியப்பட்டால் அவை டுபாய் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்படும்” என்றும் கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement