• May 19 2024

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு! samugammedia

Chithra / Jul 23rd 2023, 8:13 am
image

Advertisement

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் நாளை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த மாதம் 18 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் அடுத்த மாதம் 28ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மாதம் 27ஆம் திகதி வரையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறும்.

அத்துடன் மூன்றாம் தவனை கற்றல் செயற்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.


பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு samugammedia அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் நாளை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அடுத்த மாதம் 18 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்படவுள்ளது.இதனையடுத்து இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் அடுத்த மாதம் 28ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மாதம் 27ஆம் திகதி வரையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறும்.அத்துடன் மூன்றாம் தவனை கற்றல் செயற்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.அதேநேரம், எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement