• May 02 2024

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு! SamugamMedia

Chithra / Mar 17th 2023, 10:27 am
image

Advertisement

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளையுடன்(சனிக்கிழமை) நிறைவடையவுள்ளது.

எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள போதிலும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு இதுவரை பணம் கிடைக்கப்பெறவில்லை என அரசாங்க அச்சக அலுவலர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

340 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவற்றின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


உள்ளூராட்சி மன்றங்களை ஆணையாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்கிடையில், திட்டமிட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தாததன் மூலம் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளது.


340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு SamugamMedia 340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளையுடன்(சனிக்கிழமை) நிறைவடையவுள்ளது.எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள போதிலும், வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு இதுவரை பணம் கிடைக்கப்பெறவில்லை என அரசாங்க அச்சக அலுவலர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.340 உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவற்றின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.உள்ளூராட்சி மன்றங்களை ஆணையாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதற்கிடையில், திட்டமிட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தாததன் மூலம் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement