ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற வைப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் நேற்றையதினம்(02) இரவு திருகோணமலை தோப்பூரில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி, ஜனாதிபதி தேர்தலின் செயற்பாட்டு நடவடிக்கைக்காக கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்களுக்கான இணைப்பாளர் ஹஸன் அலல்தீன், தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் வைத்தியர் ஸியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற வைப்பதற்கான ஆக்கபூர்வமான கருத்துக்கள்,பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமலையில் ரணிலுக்கு ஆதரவு திரட்டும் வகையில் முக்கிய கலந்துரையாடல். ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற வைப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் நேற்றையதினம்(02) இரவு திருகோணமலை தோப்பூரில் இடம்பெற்றது.இக் கலந்துரையாடலில், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி, ஜனாதிபதி தேர்தலின் செயற்பாட்டு நடவடிக்கைக்காக கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்களுக்கான இணைப்பாளர் ஹஸன் அலல்தீன், தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் வைத்தியர் ஸியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற வைப்பதற்கான ஆக்கபூர்வமான கருத்துக்கள்,பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.