• Jan 19 2025

யாழில் கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு..!

Sharmi / Dec 31st 2024, 3:57 pm
image

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்திற்கும், வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்கும் இடையிலான சந்திப்பு யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில்   இன்று(31)   இடம்பெற்றது.  

இதன் பொழுது, கடற்றொழில் அமைச்சால் முன்மொழியப்படவுள்ள புதிய சட்டமூலத்தை இடைநிறுத்தல், தமிழக அரசியல் தலைமைகளுடன், வடக்குக் கிழக்கு தமிழ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை முன்னெடுப்பதை வலியுறுத்தல் , தேசிய மக்கள் சக்தியால் மீனவர் பிரச்சினை தொடர்பில் கோரப்பட்ட கால அவகாசம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைதல், 2025 ஆண்டில் வடமாகாண மீனவர்களின் வாழ்வியல் செயற்திட்டங்கள், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவை சந்திப்பதற்கான தீர்மானம் ஆகிய விடயங்கள் தொடர்பாக இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த சந்திப்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஏமன் குமார, வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்சிஸ், இணையத்தின் செயலாளர் மொகமட் ஆலம், இணையத்தின் பொருளாளர் ரவீந்திரன் பிரியா , ஊடக பேச்சாளர் அ. அன்னராசா , முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


யாழில் கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் முக்கிய சந்திப்பு. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்திற்கும், வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்கும் இடையிலான சந்திப்பு யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில்   இன்று(31)   இடம்பெற்றது.  இதன் பொழுது, கடற்றொழில் அமைச்சால் முன்மொழியப்படவுள்ள புதிய சட்டமூலத்தை இடைநிறுத்தல், தமிழக அரசியல் தலைமைகளுடன், வடக்குக் கிழக்கு தமிழ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை முன்னெடுப்பதை வலியுறுத்தல் , தேசிய மக்கள் சக்தியால் மீனவர் பிரச்சினை தொடர்பில் கோரப்பட்ட கால அவகாசம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைதல், 2025 ஆண்டில் வடமாகாண மீனவர்களின் வாழ்வியல் செயற்திட்டங்கள், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவை சந்திப்பதற்கான தீர்மானம் ஆகிய விடயங்கள் தொடர்பாக இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.குறித்த சந்திப்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஏமன் குமார, வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்சிஸ், இணையத்தின் செயலாளர் மொகமட் ஆலம், இணையத்தின் பொருளாளர் ரவீந்திரன் பிரியா , ஊடக பேச்சாளர் அ. அன்னராசா , முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement