• Nov 05 2026

கொழும்பில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Bus
Chithra / Nov 5th 2026, 10:07 am
image


வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கொழும்பில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இணைந்து விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளன.


இம்முறை தீபாவளி பண்டிகை எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. 


இதனை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பெருமளவிலான பயணிகள் நவம்பர் 6ஆம் திகதி முதல் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், நவம்பர் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் கொழும்பில் இருந்து ஹட்டன், தலவாக்கலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளின் பெரும்பாலான இருக்கைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபையின் இருக்கை முன்பதிவு சேவையை முன்னெடுக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


அத்துடன், யாழ்ப்பாணம், வவுனியா, பதுளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான இருக்கை முன்பதிவுகளும் தற்போது வேகமாக இடம்பெற்று வருகின்றன.


எனவே, தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய பயணிகள் நெரிசலைத் தவிர்த்து, சிரமமின்றிப் பயணங்களை மேற்கொள்ளும் வகையில், பொதுமக்கள் 1315.lk அல்லது sltbeseat.lk ஆகிய இணையத்தளங்களுக்குச் சென்று முன்கூட்டியே தங்களுக்கான பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்துகொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.


கொழும்பில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கொழும்பில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இணைந்து விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளன.இம்முறை தீபாவளி பண்டிகை எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பெருமளவிலான பயணிகள் நவம்பர் 6ஆம் திகதி முதல் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நவம்பர் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் கொழும்பில் இருந்து ஹட்டன், தலவாக்கலை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளின் பெரும்பாலான இருக்கைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபையின் இருக்கை முன்பதிவு சேவையை முன்னெடுக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.அத்துடன், யாழ்ப்பாணம், வவுனியா, பதுளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான இருக்கை முன்பதிவுகளும் தற்போது வேகமாக இடம்பெற்று வருகின்றன.எனவே, தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய பயணிகள் நெரிசலைத் தவிர்த்து, சிரமமின்றிப் பயணங்களை மேற்கொள்ளும் வகையில், பொதுமக்கள் 1315.lk அல்லது sltbeseat.lk ஆகிய இணையத்தளங்களுக்குச் சென்று முன்கூட்டியே தங்களுக்கான பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்துகொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement