• Sep 21 2024

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

Chithra / Aug 9th 2024, 7:57 am
image

Advertisement

 

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் ஒருவரிடம் தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால், அவர் சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை பயன்படுத்தலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அத்துடன், தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு, அதனை பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார். 

அதன்படி, வாக்காளர்கள் தமது பகுதிக்குரிய கிராம சேவகர்களை சந்தித்து, உரிய ஆவணங்களை பூர்த்தி செய்து, தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு  ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் ஒருவரிடம் தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால், அவர் சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றை பயன்படுத்தலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு, அதனை பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார். அதன்படி, வாக்காளர்கள் தமது பகுதிக்குரிய கிராம சேவகர்களை சந்தித்து, உரிய ஆவணங்களை பூர்த்தி செய்து, தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement