• Apr 02 2025

ஜனாதிபதித் தேர்தலில் இருந்து நீக்கப்பட்ட இரு சின்னங்கள்

Chithra / Aug 9th 2024, 8:01 am
image

 

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் இரு சின்னங்கள் நீக்க்கப்பட்டுள்ளன.

இதற்கமைய சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் நாய் மற்றும் பன்றி சின்னங்கள் நீக்க்கப்பட்டுள்ளன.

தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் மத உணர்வை புண்படுத்தும் சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதித் தேர்தலில் இருந்து நீக்கப்பட்ட இரு சின்னங்கள்  ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் இரு சின்னங்கள் நீக்க்கப்பட்டுள்ளன.இதற்கமைய சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் நாய் மற்றும் பன்றி சின்னங்கள் நீக்க்கப்பட்டுள்ளன.தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் மத உணர்வை புண்படுத்தும் சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now