• May 19 2024

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு samugammedia

Chithra / Jul 30th 2023, 3:04 pm
image

Advertisement

இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதிக செலவினால் ஏற்பட்டுள்ள சுமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலத்திரனியல் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு 20 அமெரிக்க டொலர்கள் செலவாகும். வருடாந்தம் குறைந்தது 750,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என அமைச்சு கூறுகிறது.

அதற்குத் தேவையான தொகை 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள். ஒரு முறை கடவுச்சீட்டு தயாரிக்கும் இயந்திரங்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு முறை தொடங்கும் வரை தற்போதுள்ள கடவுச்சீட்டு முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள N வகை உரிமங்களின் இருப்பு நவம்பர் மாதம் வரை மாத்திரமே போதுமானதாக உள்ளதென தெரியவந்துள்ளது.

எனவே, 5 லட்சம் N வகை அனுமதிப் பத்திரங்களை உடனடியாக பெற்றுக்கொள்ள குடிவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தற்போது மாதத்திற்கு எண்பத்தைந்தாயிரம் வகை 'N' அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு samugammedia இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.அதிக செலவினால் ஏற்பட்டுள்ள சுமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இலத்திரனியல் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு 20 அமெரிக்க டொலர்கள் செலவாகும். வருடாந்தம் குறைந்தது 750,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என அமைச்சு கூறுகிறது.அதற்குத் தேவையான தொகை 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள். ஒரு முறை கடவுச்சீட்டு தயாரிக்கும் இயந்திரங்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு முறை தொடங்கும் வரை தற்போதுள்ள கடவுச்சீட்டு முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.தற்போதுள்ள N வகை உரிமங்களின் இருப்பு நவம்பர் மாதம் வரை மாத்திரமே போதுமானதாக உள்ளதென தெரியவந்துள்ளது.எனவே, 5 லட்சம் N வகை அனுமதிப் பத்திரங்களை உடனடியாக பெற்றுக்கொள்ள குடிவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.தற்போது மாதத்திற்கு எண்பத்தைந்தாயிரம் வகை 'N' அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement