• Nov 19 2024

கொலம்பியாவில், பெண்களின் திருமண வயதை அதிகரிக்கும் - மசோதா நிறைவேற்றம்

Tharmini / Nov 16th 2024, 12:21 pm
image

இலத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குழந்தைத் திருமணங்களை ஒழிக்கும் முகாந்திரத்தில்,

புதிய சட்டமூலம் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, கொலம்பியாவில் இதுவரை பெற்றோர் சம்மதத்துடன்,

14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது.

இதற்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது. 

மேலும், அவர்கள் சிறுமிகள்! மனைவிகள் அல்ல! என்ற முழக்கம் அந்நாட்டில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் இந்த சட்டமூலம் மீது தற்போது கொலம்பிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதிக வாக்குகளுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை பாராளுமன்றத்தில் வைத்தே அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. 

கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இதில் கையெழுத்திட்ட பின்னர் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டும். 

இதன்மூலம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கொலம்பியாவில், பெண்களின் திருமண வயதை அதிகரிக்கும் - மசோதா நிறைவேற்றம் இலத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குழந்தைத் திருமணங்களை ஒழிக்கும் முகாந்திரத்தில், புதிய சட்டமூலம் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, கொலம்பியாவில் இதுவரை பெற்றோர் சம்மதத்துடன்,14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது.இதற்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது. மேலும், அவர்கள் சிறுமிகள் மனைவிகள் அல்ல என்ற முழக்கம் அந்நாட்டில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.இந்நிலையில் இந்த சட்டமூலம் மீது தற்போது கொலம்பிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதிக வாக்குகளுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனை பாராளுமன்றத்தில் வைத்தே அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இதில் கையெழுத்திட்ட பின்னர் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டும். இதன்மூலம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement