• Sep 20 2024

கிளிநொச்சியில், மாணவர்களை தாக்கிய வெறியர்கள் !!

Tamil nila / Jan 18th 2023, 6:27 pm
image

Advertisement

கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தில் இருந்து முக்கொம்பன் மகா வித்தியாலயத்திற்கு சென்ற மாணவர்களில் சுமார் 15 மாணவர்களை, வழியில் போதையில் நின்ற நான்கு பேர் தடிகளினால் தாக்கியுள்ளனர்.


இது தொடர்பில் அக்கராயன் பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மூவர் கைது செய்யப்படவில்லை எனவும் பெற்றோர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.


கண்ணகைபுரம், 150 வீட்டுத் திட்டப் பகுதிகளில் கசிப்பு உற்பத்தி கூடுதலாக காணப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்துமாறு பொது மக்களினால் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.


கசிப்பினை கட்டுப்படுத்துவதற்கு முக்கொம்பனில் காவல் பிரிவு ஒன்று அமைக்குமாறு பெற்றோர்களினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு இரணைமடுவில் உள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.


தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் பாடசாலைக்கு வரவில்லை எனவும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியில், மாணவர்களை தாக்கிய வெறியர்கள் கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தில் இருந்து முக்கொம்பன் மகா வித்தியாலயத்திற்கு சென்ற மாணவர்களில் சுமார் 15 மாணவர்களை, வழியில் போதையில் நின்ற நான்கு பேர் தடிகளினால் தாக்கியுள்ளனர்.இது தொடர்பில் அக்கராயன் பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மூவர் கைது செய்யப்படவில்லை எனவும் பெற்றோர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.கண்ணகைபுரம், 150 வீட்டுத் திட்டப் பகுதிகளில் கசிப்பு உற்பத்தி கூடுதலாக காணப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்துமாறு பொது மக்களினால் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.கசிப்பினை கட்டுப்படுத்துவதற்கு முக்கொம்பனில் காவல் பிரிவு ஒன்று அமைக்குமாறு பெற்றோர்களினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு இரணைமடுவில் உள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் பாடசாலைக்கு வரவில்லை எனவும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement