மன்னார் மாவட்ட செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விளையாட்டு விழா மன்னார் உதவி மாவட்ட செயலாளர் டிலிசன் பயஸ் தலைமையில் நேற்று (13) மாலை மன்னார் நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் உடல் வலிமை மற்றும் மனவலிமையை விருத்தி செய்யும் நோக்கோடு இடம்பெற்ற குறித்த விளையாட்டு நிகழ்வில், மன்னார், நானாட்டான்,மாந்தை,முசலி,மடு ஆகிய பிரதேச செயலகங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.
இதன் போது மாற்றாற்றல் கொண்டவர்களுக்கான தட்டெறிதல்,குண்டெறிதல் ,ஈட்டி எறிதல், ஓட்டம், நீளம் பாய்தல் உட்பட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றதோடு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், குறித்த போட்டியில் வெற்றியீட்டிய மாற்றுத்திறனாளிகள் தேசிய ரீதியாக இடம்பெறவுள்ள மாற்றுத்திறனாளிகளிக்கான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இயலாமையிலும் திறமையை வெளிப்படுத்திய மாற்றுத் திறனாளிகள். மன்னார் மாவட்ட செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விளையாட்டு விழா மன்னார் உதவி மாவட்ட செயலாளர் டிலிசன் பயஸ் தலைமையில் நேற்று (13) மாலை மன்னார் நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.மாற்றுத்திறனாளிகளின் உடல் வலிமை மற்றும் மனவலிமையை விருத்தி செய்யும் நோக்கோடு இடம்பெற்ற குறித்த விளையாட்டு நிகழ்வில், மன்னார், நானாட்டான்,மாந்தை,முசலி,மடு ஆகிய பிரதேச செயலகங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.இதன் போது மாற்றாற்றல் கொண்டவர்களுக்கான தட்டெறிதல்,குண்டெறிதல் ,ஈட்டி எறிதல், ஓட்டம், நீளம் பாய்தல் உட்பட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றதோடு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.மேலும், குறித்த போட்டியில் வெற்றியீட்டிய மாற்றுத்திறனாளிகள் தேசிய ரீதியாக இடம்பெறவுள்ள மாற்றுத்திறனாளிகளிக்கான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.