• Oct 02 2024

தைப்பொங்கலில் இலங்கை தேசம் முன்னேற்றம் அடையவும், அதன்மூலம் மக்கள் வாழ்வு மேம்படவும் வழி பிறக்கும் - அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து...samugammedia

Tharun / Jan 14th 2024, 6:16 pm
image

Advertisement

 " தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது இந்து மக்களின் உறுதியான நம்பிக்கை. எனவே, எமது நாட்டை சூழ்ந்துள்ள 'பொருளாதார நெருக்கடி' எனும் இருள் அகன்று,  இலங்கை தேசம் முன்னேற்றம் அடையவும், அதன்மூலம் மக்கள் வாழ்வு மேம்படவும் வழி பிறக்கும் என உறுதியாக நம்புகின்றேன்."  - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.  

தைத்திருநாளை முன்னிட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

 " இன்றைய நவீன உலகில் சூழல் பாதுகாப்பு பற்றி அதிகம் பேசப்படுகின்றது.  ஐ.நா.சபையில் தீர்மானங்கள் கூட நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்கள்தான் தமிழர்கள். இயற்கையை  வழிபட்டு, கொண்டாட்டங்களை நடத்தி சுற்றுசூழலை பாதுகாத்தனர்.  இம்முறையும் இயற்கைக்கு நன்றி கூறி, இனிமையாக தைத்திருநாளை கொண்டாடுவோம். விவசாயிகளையும் போற்றுவோம்.  

 இலங்கைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகுக்கும் அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களையும், வளங்களையும் தைத்திருநாள் வழங்க வேண்டும்.  அதற்காக இன்றைய மகத்தான நாளில் இறைவழிபாடுகளில் ஈடுபடுவோம். இஷ்ட தெய்வங்களை வணங்குவோம். 

மலையக தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை துரிதமாக முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் தேசிய பொங்கல் விழாவையும் இம்முறை மலையகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் .

மலையகத்தில் மாற்றம் மலர்ந்து மக்களுக்கு வழி பிறக்கட்டும், இல்லங்கள் தோறும் இன்பங்கள் பெருகட்டும், தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும். அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்." - என தெரிவித்துள்ளார்

தைப்பொங்கலில் இலங்கை தேசம் முன்னேற்றம் அடையவும், அதன்மூலம் மக்கள் வாழ்வு மேம்படவும் வழி பிறக்கும் - அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து.samugammedia  " தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது இந்து மக்களின் உறுதியான நம்பிக்கை. எனவே, எமது நாட்டை சூழ்ந்துள்ள 'பொருளாதார நெருக்கடி' எனும் இருள் அகன்று,  இலங்கை தேசம் முன்னேற்றம் அடையவும், அதன்மூலம் மக்கள் வாழ்வு மேம்படவும் வழி பிறக்கும் என உறுதியாக நம்புகின்றேன்."  - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.  தைத்திருநாளை முன்னிட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  " இன்றைய நவீன உலகில் சூழல் பாதுகாப்பு பற்றி அதிகம் பேசப்படுகின்றது.  ஐ.நா.சபையில் தீர்மானங்கள் கூட நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்கள்தான் தமிழர்கள். இயற்கையை  வழிபட்டு, கொண்டாட்டங்களை நடத்தி சுற்றுசூழலை பாதுகாத்தனர்.  இம்முறையும் இயற்கைக்கு நன்றி கூறி, இனிமையாக தைத்திருநாளை கொண்டாடுவோம். விவசாயிகளையும் போற்றுவோம்.   இலங்கைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகுக்கும் அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களையும், வளங்களையும் தைத்திருநாள் வழங்க வேண்டும்.  அதற்காக இன்றைய மகத்தான நாளில் இறைவழிபாடுகளில் ஈடுபடுவோம். இஷ்ட தெய்வங்களை வணங்குவோம். மலையக தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை துரிதமாக முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் தேசிய பொங்கல் விழாவையும் இம்முறை மலையகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் .மலையகத்தில் மாற்றம் மலர்ந்து மக்களுக்கு வழி பிறக்கட்டும், இல்லங்கள் தோறும் இன்பங்கள் பெருகட்டும், தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும். அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்." - என தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement