• May 13 2024

கொழும்பில் கடந்த 50 நாட்களில் மாணவி உட்பட 11 பேர் எடுத்த விபரீத முடிவு!

Chithra / Dec 29th 2022, 7:25 am
image

Advertisement

ஹோமாகம மரண விசாரணை அதிகாரி பகுதியில் கடந்த ஐம்பது நாட்களில் பதினைந்து வயது பாடசாலை மாணவி உட்பட பதினொரு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சமாதான நீதவான் பீ.எச்.கே.சிந்தக உதய குமார தெரிவித்துள்ளார்.

இவர்கள் பனாகொட, ஹபரகட, நியதகல, பிடிபன, ஹிரிபிட்டிய, மீகொட, ஹன்வெல்ல மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இவ்வாறு உயிரிழந்தவர்களில் 15-65 வயதுடையவர்கள் எனவும் ஏழு பேர் மது மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் எனவும் மேலும் பலர் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தினால் இந்த விபரீத முடிவை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மீகொட பிரதேசத்தில் வசிக்கும் பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுடன், காதல் உறவினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


மேலும், சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவரது தந்தை வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன்படி கடந்த ஐம்பது நாட்களில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும், மன உளைச்சல், மற்றும் விரக்தியே இந்த மரணங்களுக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

தற்கொலை எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையாது என்பதுடன், எந்த ஒரு பிரச்சனையிலும் தகுந்த நபரிடம் ஆலோசனை பெறுவது கட்டாயமாகும். 

எனவே நெருக்கடி ஏற்பட்டாலோ அல்லது மனநலப்பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருப்பின் யாருக்கேனும் அவசர உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள் தேசிய மனநலக் கழக உதவி எண் 1926ஐத் தொடர்பு கொள்ளலாம்.

கொழும்பில் கடந்த 50 நாட்களில் மாணவி உட்பட 11 பேர் எடுத்த விபரீத முடிவு ஹோமாகம மரண விசாரணை அதிகாரி பகுதியில் கடந்த ஐம்பது நாட்களில் பதினைந்து வயது பாடசாலை மாணவி உட்பட பதினொரு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சமாதான நீதவான் பீ.எச்.கே.சிந்தக உதய குமார தெரிவித்துள்ளார்.இவர்கள் பனாகொட, ஹபரகட, நியதகல, பிடிபன, ஹிரிபிட்டிய, மீகொட, ஹன்வெல்ல மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு உயிரிழந்தவர்களில் 15-65 வயதுடையவர்கள் எனவும் ஏழு பேர் மது மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் எனவும் மேலும் பலர் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தினால் இந்த விபரீத முடிவை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும், மீகொட பிரதேசத்தில் வசிக்கும் பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுடன், காதல் உறவினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மேலும், சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவரது தந்தை வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இதன்படி கடந்த ஐம்பது நாட்களில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும், மன உளைச்சல், மற்றும் விரக்தியே இந்த மரணங்களுக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.தற்கொலை எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையாது என்பதுடன், எந்த ஒரு பிரச்சனையிலும் தகுந்த நபரிடம் ஆலோசனை பெறுவது கட்டாயமாகும். எனவே நெருக்கடி ஏற்பட்டாலோ அல்லது மனநலப்பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருப்பின் யாருக்கேனும் அவசர உதவி தேவைப்பட்டால், பொதுமக்கள் தேசிய மனநலக் கழக உதவி எண் 1926ஐத் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

Advertisement

Advertisement