புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் புதிதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு இன்று(02) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் இன்று(02) காலை 11 மணியளவில் இடம்பெற்ற இந் நிகழ்வில், வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் திலக் சி.ஏ.தனபால கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவினை திறந்து வைத்துள்ளார்.
நிகழ்வில் சிறார்களின் நடன நிகழ்வு இடம்பெற்றிருந்ததனை தொடர்ந்து கலந்து கொண்ட அதிதிகளால் மரநடுகையும் இடம்பெற்றிருந்தது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வா, 593 பிரிக்கேட் கொமாண்டர் பிரிகேடியர் அணில் சோமவீர, முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேன , உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த விதாரன , முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் நன்னடத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி குமாரி ஆரியரத்ன, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் பரணிதரன், மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் , புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பெண்கள் சிறுவர் உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர் த.நவநீதன், இணக்க சபை உபதலைவர் ஐ.மாதவராசா, புதுக்குடியிருப்பு இலங்கை வங்கி முகாமையாளர், சிவில் பொலிஸ் பாதுகாப்பு குழு, கிராம சேவகர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுவர், பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு திறந்து வைப்பு. புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் புதிதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு இன்று(02) திறந்து வைக்கப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் இன்று(02) காலை 11 மணியளவில் இடம்பெற்ற இந் நிகழ்வில், வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் திலக் சி.ஏ.தனபால கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பிரிவினை திறந்து வைத்துள்ளார்.நிகழ்வில் சிறார்களின் நடன நிகழ்வு இடம்பெற்றிருந்ததனை தொடர்ந்து கலந்து கொண்ட அதிதிகளால் மரநடுகையும் இடம்பெற்றிருந்தது.குறித்த நிகழ்வில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வா, 593 பிரிக்கேட் கொமாண்டர் பிரிகேடியர் அணில் சோமவீர, முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேன , உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த விதாரன , முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் நன்னடத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி குமாரி ஆரியரத்ன, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் பரணிதரன், மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை வைத்தியர் , புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பெண்கள் சிறுவர் உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர் த.நவநீதன், இணக்க சபை உபதலைவர் ஐ.மாதவராசா, புதுக்குடியிருப்பு இலங்கை வங்கி முகாமையாளர், சிவில் பொலிஸ் பாதுகாப்பு குழு, கிராம சேவகர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.