• Sep 20 2024

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மத்திய மலை நாட்டில் கடும் மழை! samugammedia

Tamil nila / Nov 2nd 2023, 8:15 pm
image

Advertisement

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டின் சரிவு பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.

நீர் போசன பிரதேசங்களுக்கு கிடைத்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து நீர் வான் பாய்ந்து வருகின்றன எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நோட்டன் பிரிஜ் பகுதியில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் உள்ள அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருகின்றன.

எனவே களனி கங்கைக்கு சமீபமாக வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை நீர் போசன பிரதேசங்களுக்கு பெய்து வரும் அதிக மழை காரணமாக காசல்ரி, மவுசாக்கலை, கெனியோன், லக்ஸபான், நவ லக்ஸபான உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வான் பாயும் அளவினை எட்டியுள்ளன.

இதனால் எவ்வேளையிலும் வான்கதவுகள் திறக்கப்படலாம் என்பதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மழையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல கினிகத்தேனை, கடவலை, தியகல, வட்டவளை, ஹட்டன்  ஆகிய பகுதிகளிலும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளையார், ரதல்ல நானுஓயா உள்ளிட்ட பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் காணப்படுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதான த வாகனங்ளை செலுத்த வேண்டும் என்றும் பனிமூட்டம் காணப்படும். போது தங்களுக்கு உரிய பக்கத்தில் வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மத்திய மலை நாட்டில் கடும் மழை samugammedia நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டின் சரிவு பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.நீர் போசன பிரதேசங்களுக்கு கிடைத்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து நீர் வான் பாய்ந்து வருகின்றன எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.நோட்டன் பிரிஜ் பகுதியில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் உள்ள அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருகின்றன.எனவே களனி கங்கைக்கு சமீபமாக வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.இதேவேளை நீர் போசன பிரதேசங்களுக்கு பெய்து வரும் அதிக மழை காரணமாக காசல்ரி, மவுசாக்கலை, கெனியோன், லக்ஸபான், நவ லக்ஸபான உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வான் பாயும் அளவினை எட்டியுள்ளன.இதனால் எவ்வேளையிலும் வான்கதவுகள் திறக்கப்படலாம் என்பதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.மழையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல கினிகத்தேனை, கடவலை, தியகல, வட்டவளை, ஹட்டன்  ஆகிய பகுதிகளிலும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளையார், ரதல்ல நானுஓயா உள்ளிட்ட பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் காணப்படுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதான த வாகனங்ளை செலுத்த வேண்டும் என்றும் பனிமூட்டம் காணப்படும். போது தங்களுக்கு உரிய பக்கத்தில் வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement