• Jan 09 2025

வரி வீதங்களை அதிகரித்தால் வாகன விலைகளும் தானாகவே உயரும் - வெளியான தகவல்

Chithra / Jan 9th 2025, 1:04 pm
image

 

வாகன இறக்குமதிக்கான தற்போதைய வரி வரம்புகள் மாற்றப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விற்பனை விலைகளும் பாதிக்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள வரி விகிதங்களின் கீழ் வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கியவுடன் மதிப்பிடப்பட்ட விலைகளைக் கணக்கிட முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், அரசாங்கம் வரி வீதங்களை அதிகரித்தால், வாகன விலைகளும் தானாகவே உயரும் என்றும், வரி வீதங்களை குறைப்பது விலைகளைக் குறைக்க வழிவகுக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, தற்போது, ​​உள்ளூர் சந்தையில் ஒரு ஜப்பானிய காருக்கு விதிக்கப்படும் வரித் தொகை அதன் உற்பத்தி விலையை விட சுமார் 300 வீதம் ஆகும்.

இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக விநியோகம் குறைவதால் ஏற்படும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளில் ஏற்படும் அதிகரிப்பு, வாகன இறக்குமதி மீண்டும் தொடங்குவதன் மூலம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று சங்கம் எதிர்பார்த்துள்ளது.

வரி வீதங்களை அதிகரித்தால் வாகன விலைகளும் தானாகவே உயரும் - வெளியான தகவல்  வாகன இறக்குமதிக்கான தற்போதைய வரி வரம்புகள் மாற்றப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விற்பனை விலைகளும் பாதிக்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போதுள்ள வரி விகிதங்களின் கீழ் வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கியவுடன் மதிப்பிடப்பட்ட விலைகளைக் கணக்கிட முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.இருப்பினும், அரசாங்கம் வரி வீதங்களை அதிகரித்தால், வாகன விலைகளும் தானாகவே உயரும் என்றும், வரி வீதங்களை குறைப்பது விலைகளைக் குறைக்க வழிவகுக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதன்படி, தற்போது, ​​உள்ளூர் சந்தையில் ஒரு ஜப்பானிய காருக்கு விதிக்கப்படும் வரித் தொகை அதன் உற்பத்தி விலையை விட சுமார் 300 வீதம் ஆகும்.இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக விநியோகம் குறைவதால் ஏற்படும் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளில் ஏற்படும் அதிகரிப்பு, வாகன இறக்குமதி மீண்டும் தொடங்குவதன் மூலம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று சங்கம் எதிர்பார்த்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement