• Jan 10 2025

நிதி ஒதுக்கீடு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்த பிரதமர்!

Chithra / Jan 9th 2025, 1:08 pm
image

 

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இன்று  நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.

குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதன்படி, இரண்டாம் வாசிப்பு விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் பெப்ரவரி 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், 

இரண்டாம் வாசிப்பும் வாக்கெடுப்பும் 25 ஆம் திகதி பிற்பகல் இடம்பெறவுள்ளது.

பெப்ரவரி 27 ஆம் திகதிக்கும் மார்ச் 21 ஆம் திகதிக்கும் இடையில், குழுவின் சந்தர்ப்பம் அல்லது வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்பட உள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளது.

நிதி ஒதுக்கீடு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்த பிரதமர்  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இன்று  நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.அதன்படி, இரண்டாம் வாசிப்பு விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் பெப்ரவரி 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பும் வாக்கெடுப்பும் 25 ஆம் திகதி பிற்பகல் இடம்பெறவுள்ளது.பெப்ரவரி 27 ஆம் திகதிக்கும் மார்ச் 21 ஆம் திகதிக்கும் இடையில், குழுவின் சந்தர்ப்பம் அல்லது வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்பட உள்ளது.வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement