• Jan 09 2025

வீதிகளின் பெயர் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டமையால் சிரமம்

Chithra / Jan 9th 2025, 12:56 pm
image


வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட விளம்பர பெயர் பலகைகள் பல அகற்றப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, சாய்ந்தமருது, மாவடிப்பள்ளி, காரைதீவு உள்ளிட்ட சில பகுதிகளின் விளம்பர பலகைகள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.

மேற்படி விளம்பர பலகைகள் சேதமடைந்த நிலையில் காணப்பட்டதுடன், தெளிவற்றதாக இடங்களின் பெயர்களும் கடந்த காலங்களில் காணப்பட்டதை ஆர்வலர்கள் சிலரால் சமூக ஊடகங்களில் வெளிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பெயர் பலகைகள் திடிரென அகற்றப்பட்ட போதிலும் தற்காலிகமான எந்தவொரு ஏற்பாடும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் வெளியிடங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வீதிகளின் பெயர் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டமையால் சிரமம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட விளம்பர பெயர் பலகைகள் பல அகற்றப்பட்டு வருகின்றன.அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, சாய்ந்தமருது, மாவடிப்பள்ளி, காரைதீவு உள்ளிட்ட சில பகுதிகளின் விளம்பர பலகைகள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.மேற்படி விளம்பர பலகைகள் சேதமடைந்த நிலையில் காணப்பட்டதுடன், தெளிவற்றதாக இடங்களின் பெயர்களும் கடந்த காலங்களில் காணப்பட்டதை ஆர்வலர்கள் சிலரால் சமூக ஊடகங்களில் வெளிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறு பெயர் பலகைகள் திடிரென அகற்றப்பட்ட போதிலும் தற்காலிகமான எந்தவொரு ஏற்பாடும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படவில்லை.இதனால் வெளியிடங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement